பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



166

சு.சமுத்திரம் o

அந்தம்மா, இப்போது கூழாகிப் போன முட்டைகளை, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தார்... அதன் பின் தன் மகிழ்ச்சியைக் காட்டும் வகையில் மீண்டும் காலில் தலை போட்ட உதவிச் சமையல்காரியின் நெற்றிக்கு கால் நகத்தால் குங்குமம் போட்டார்... உடனே கீழே கிடந்த அந்தப் பிராட்டியாரும் பக்திச்சுவை சொட்டச் சொட்ட எழுந்தார்... அம்மாவை கைகூப்பி பார்த்தபடியே மீண்டும் விழப் போனார். இதற்குள் கால்கள் கிடைக்காமல் முண்டியடித்த சமைய லாளிக் கூட்டத்தில் சாமியாடிக் கொண்டிருந்த மீன்குமார், அம்மாவின் காலில் குனிந்துதான் விழப் போனார்... பிறகு அது மரியாதைக் குறைவு என்று நினைத்ததுபோல் தடாலென்று விழுந்தார்... ஆனாலும் நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று... மீன்களை அரிவாள் மனையில் நறுக்கிக் கொண்டிருந்த அவர், அவசரத்தில் அந்த அரிவாள் மனையைக் கையில் எடுத்தபடியே கீழே விழுந்து விட்டார்... இதனால் அவர் தலையில் பலத்த வேட்டு... அம்மாவின் பாதங்களில் லேசான இரத்தக் கீறல்கள்... அன்னையாரும் ஒரு காலை லேசாய் தூக்கி படபடப்பாய், கோபம், கோபமாய் பார்த்தார்...

அம்மாவின் காலில் விழப் போன எஞ்சிய சமை யலாளிகள், துடிதுடித்துப் போனார்கள்... தலையில் நீருற்று போல் ரத்தம் பொங்கும் மீன் குமாரை, ஒரு தள்ளு, தள்ளிவிட்டு, அம்மாவின் பாதக்கீறல்களை படபடப்பாய் பார்த்தார்கள். பெண் உதவிச் சமையலாளி வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, வயிற்று மறைப்பிற்குள் உடைபடாமலிருக்கும் முட்டைகள் எவ்வளவு தேறும் என்று கணக்குப் பார்த்தார்... என்றாலும் அம்மா கஷ்டப்பட்ட காலத்திலேயே அவருக்கு பக்கத் துணையாக இருந்த ஒரு முக்கிய சமையலாளி, இப்படிச் சூளுரைத்தார்.