❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
167
"தமிழைப் பெற்ற தாயே... என் தாயை சின்னவளாக்கிய பெரியவளே!" உன் திருப்பாதங்களில் ரத்தத்தைக் கண்ட பிறகும், நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமா தாயே... அய்யகோ இது என்ன கொடுமை... காலில்பட்டகாயத் தையும், வலி பொறுக்காமல் நீ பல்லைக் கடிப்பதையும் பார்த்துக் கொண்டு இன்னும் நாங்கள் உயிரோடு இருக்கிறோமே தாயே... இதுதானம்மா கொடுமை... ஆனாலும் இனி இருப்பதில்லை... உயிர் தரிப்பதில்லை. உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா பிறவி எடுத்தோம்? இப்போதே தீக்குளிப்புச் செய்யப் போகிறோம் தாயே!”
அந்த முக்கிய சமையலாளி, உடனடியாய் ஓடிப்போய் சாமன்ய சமையல் கட்டுக்கு கீழே வைக்கப்பட்ட ஒரு மண்ணெண்ணை பாட்டிலை, எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார். சக சமையலாளிகள் அனைவர் மீதும், பாட்டிலைத் திறந்து குபுக் குபுக் என்று ஊற்றினார்... பிறகு, 'ஆளுக்கு ஒரு தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு தீக்குளிப்பு செய்யுங்கள்' என்றார். தான் மட்டும் அந்த தீக்குளிப்பை பார்த்துவிட்டு அப்புறம் யோசிக்கப் போவதுபோல்; வேறு வழியில் லாமலோ என்னவோ, அத்தனை சமையலாளிகளும் வத்திப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை விட்டு விட்டு, அவை இல்லாத இடத்தைத் தேடினார்கள்... 'எங்கே தீப் பெட்டி... எங்களின் இனிய தியாகத்திற்குத் துணை போகும் தீப்பெட்டி எங்கே... எங்கே...” என்று குரலிட்டார்கள்...
இதற்குள் வெளியே வேடிக்கை பார்த்த கூட்டத்தில் இருந்த தலைமறைவு புகழ் சாமி” ஒரு தீப்பெட்டியை எடுத்து உள்ளே போட்டுவிட்டு, மீண்டும் தலைமறை வானார். வேறு வழியில்லாமல் அந்த முக்கிய சமையலாளி தீப்பெட்டியை எடுத்து குச்சியையும் உருவி, இன்னொரு 'வாய் செத்த சமையலாளி,மேல் குறி வைத்தார். ஆனாலும்-