❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
171
ஆணையிட்டார். உடனே அத்தனை சமையலாளிகளும் தம் பணி இருக்கைகளில் உட்கார்ந்து தத்தம் வேலைகளைச் செய்ய தொடங்கினார்கள். அம்மாவும் அந்த வேலைகளை பட்டும் படாமலும் பார்வையிட்டார். சிறிது தொலைவில் அம்மாவின் கால்காயம் குணமாக, தொழுகை செய்து முடித்த ஒரு சமையலாளி, அம்மா அதைக் கண்டுக்காததால், மீண்டும் வெங்காயத்தை நறுக்குகிறார். பிறகு அம்மாவின் காலில்பட்டதை, தன் கண்ணில் பட்டதாகக் காட்டிக் கொள்ள, தன் கண்களை கைகளால் துடைத்தார். இதை தற்செயலாக பார்த்துவிட்ட தெய்வத்தாய் அவருக்கு உபதேசித்தார். 'ஏய் உன்னத்தாண்டா... வெங்காயம் வெட்டின கையாலே கண்ணைத் துடைக்காதே... கண் எரியும்...”
உடனே அத்தனை சமையலாளிகளும் ஒரு சேர முழங்கினார்கள்.
"வெங்காயக் கை... கண்ணில்பட்டால்... கண்எரியும் என்பதைக் கண்டுபிடித்துச் சொன்ன எங்களின் விஞ்ஞான யுகமே!... உன் யுகத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம். அன்னையே... பெருமைப் படுகிறோம்..."
அன்னை, முகத்தில் எந்தச்சலனமும் இல்லை. ஆனாலும் அவரது கண்கள் பாகற்காய்களை நறுக்கிக் கொண்டிருந்த ஒரு 'ஜென்டில்மேன் சமையல்காரர் மீது பட்டு விட்டது. அன்னை, உடனே அருள் உபதேசம் செய்தார்.
"டேய்... பாகற்காய் பொரிக்கும் போது கொஞ்சம் தேங்காய் சீவலையும் போடு... அப்போதுதான் கசப்பு தெரியாது..."