உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

சு.சமுத்திரம் ❍

"குடிசை வாழ் மக்களின் மங்காத்தாவே.. சேரிவாழ் மக்களின் இசக்கியம்மனே!!... பிராமணர்களின் காமாட் சியே...!!! சூத்திரர்களின் இருளாயியே!... பிறக்கும்போதே தங்கத்தால் அரிசி செய்து, வைரத் துவையலும், வைடூரியப் பொரியலுமாய் உண்டு திளைத்த நீயே... இந்த உணவை உண்டு விட்டு புளகாங்கிதப் படுகிறாய்... ஆனால் நாம் சமைக்கும் சாப்பாட்டை உண்கிறவர்களுக்கு வாந்திபேதி வருவதாக எதிரிகள் பிரச்சாரம் செய்கிறார்கள் தாயே... இப்படிப் பகை பார்வையாய் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை தாயே... உன் குறிப்பறிந்து அந்த வாந்திபேதிக் காரர்களை குணப்படுத்த, அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டேன் தாயே... அவர்கள் குணமாக குறைந்தது மூன்று மாதமாகும் குணக் குன்றே..."

குணக் குன்றான தலைமைச் சமையலாளி, அப்படியும் உதடுகளையும் கண்களையும் ஒரு சேர துடிக்கவிட்டபோது, விவரம் புரியாத சரக்குமாஸ்டர் புல்லரித்துப் போனார்... சக சமையலாளிகளைப் பார்த்து ஒரு சொற்பொழிவே நிகழ்த்தினார்...

"உள்ளபடியே நான் சொல்வதைக் கேளுங்கள்... ரத்தங்களில் ரத்தங்களே... குறை கூறுவோரையும் குணமாக் கும் கருணை உள்ளம்... நம் கண்கண்ட தெய்வத்திற்குத் தவிர வேறு எவருக்கு வரும்?... சாப்பாடு ஒத்துவராமல் வயிற்று வலியால் துடிப்பவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் பண்பாடு வேறு எவருக்கு வரும்... இதுவன்றோ தமிழ் பண்பாடு!"

அம்மாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அந்த சரக்கு மாஸ்டரை ஒரு வாத்தைப் பார்ப்பதுபோல் பார்த்தார். பிறகு 'எல்லோரும் அவரவர் வேலையைப் பாருங்கள்'என்று