பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

0 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 173

 அன்னை அருள் பாலித்த போது, செக்கச் சிவந்த உடம்போடும், கன்னங் கரேல் உடையோடும் ஒருத்தர் அந்த சமையல் கட்டிற்குள் நுழைந்தார். இவர் முறைப்படியான சமையலாளி அல்ல. ஆனாலும் இந்த சமையல் கூடத்தில் ஒட்டிக் கொள்ளும் நிரந்தரர். இப்போது ஒட்டுதல் அதிகம்... அம்மாவின் பாதங்களை நோக்கி, கைகளை குவித்து ஒரு கும்பிடு போட்டார். அம்மா அதைக்கண்டு கொள்ளாததால், கீரை ஆய்ந்து கொண்டிருந்த ஒரு சமையலாளியிடம் போனார். அந்தக் கீரைகளில் காம்புகள் எத்தனை சதவீதம்... இலைகள் எத்தனை சதவீதம் என்று 'குத்து'மதிப்பாக பார்த்துக் கொண்டு நின்றார். உடனே அன்னையானவர், தொழிலாகுபெயரால் அவரைமரியாதையுடன் அழைத்தார்...
 "மிஸ்டர். கீரைமணி... வாருங்கள்... இதோ இங்கேயுள்ள முட்டைத் திரவத்தை ஒரு சட்டியில் வாரிப் போடுங்கள்... அதோ அங்கேயுள்ள ஜனரஞ்சக அடுப்பில் கிண்டப்படும் ரவையில் ஊற்றுங்கள்... பாவம் மக்கள்... அவர்களையும் முட்டையாக்க வேண்டாமா...?"
 கீரை மணிக்கு, உச்சி முதல் பாதம் வரை பக்தி பரவசம் ஏற்பட்டது... முட்டைக் கூழை சட்டியில் ஊற்றிக் கொண்டே, குரல் தழுதழுக்க அன்னைக்கு புகழாரம் சூட்டினார்.


"நீ சாதாரண மனுவி அல்ல... சமூக நீதி காத்த மகா மனுஷி... ஏழைகள் முட்டைகளை உடைக்க கஷ்டப்படுவார்கள் என்று, அவற்றை உடைத்துக் கொடுக்கும் உன்னதமே!... உனது இந்த தீரச் செயலுக்காக, இனமானம் காக்கும் தளபதியான நான் உனக்கு கேடயமாக இருப்பேன்... உனக்கு வாழ்நாள்வரை விசுவாசமாக இருப்பேன்... உன் எதிரிகளைச் சிதைத்து சின்னா பின்ன மாக்குவான் இந்த பகுத்தறிவு