பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 சு.சமுத்திரம் ()

 அத்தனை சமையலாளிகளும், அன்னையை விட்டு விட்டு அவசர அவசரமாய் வெளியே ஓடினார்கள். தீயின் கொடூரத்தில் அங்குமிங்குமாய் அல்லாடிய அன்னை, அவர்களின் முன்னால் ஓடிப்போய் நின்று, தன்னை காப்பாற்றும்படி ஆணையிட்டார். அப்புறம் கையெடுத்து கும்பிட்டார். ஆனால், எந்தக் கரங்கள் அவரை ஒரேயடியாய் வணங்கினவோ,அதற்குரிய

வர்கள் ஓடினார்கள். அன்னை யின் ஆடையைப்பற்றிய தீ, இப்பொழுது அவரது உடம்பை பற்றப் போனது. அவர், வலி பொறுக்க முடியாமல் தவியாய் தவித்தார். துடியாய்த் துடித்தார். அங்கும்மிங்கும் சுற்றினார். அப்பொழுது அந்த உதவிப் பெண் சமையலாளி, ஜாக்கெட்டில் பற்றிய தீயை ஜாக்கெட்டோடு கிழித்து போட்டுவிட்டு, ஓலமிட்டபடியே ஓடிக்கொண்டிருந்தாள். அன்னையோ, பெண்ணுக்கு பெண் என்ற முறையில், அந்த சமையலாளியின் முன்னால் தீ மயமான தனது வலது கரத்தை நீட்டி, "என்னைக் காப்பாற்று காப்பாற்று' என்று அழுதழுது கெஞ்சினார். ஆனால், அந்தப் பெண்ணோ " அடிப்போடி உனக்காக நான் எதற்கு சாகனும்' என்று அடாவடியாய் சொன்னதோடு, அன்னையையும் கீழே தள்ளிப்போட்டு விட்டு, தாவித்தாவி ஓடினார். அன்னை நெருப்பில் விறகாக போகின்ற நேரம்... அங்கும் இங்குமாய் தரையில் புரண்டார்

 கீரைமணியும், அன்னையைக் கண்டுக்காமலே தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடினார். பாவம்... அவர் கவலை அவருக்கு. அடுத்த தலைமை சமையலாளியிடம் எப்படி ஒட்டிக் கொள்வது என்ற சிந்தனை அவருக்கு.

     -தாமரை ஆகஸ்ட் - 1995