பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

o ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 175


 அத்தனை பேருக்கும், போன உயிர் திரும்ப வந்தது.. இப்போது அந்த உயரமான ஒல்லி சமையலாளி திக்கித் திக்கியும் திடப்பட்டும் ஆனந்தமாய் அரற்றினார்.
"ஆஸிடின் அருமையை கண்டு பிடித்த, அற்புதமே.. ஆஸிட்டுக்கு அந்தஸ்து கொடுத்த அமிலமே.. உன் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் இந்த ஆஸிடின் பெயரும் உச்சரிக்கப்படும் தாயே..! உச்சரிக்கப்படும்"
 அந்த தலைமைச் சமையலாளி, மக்களின் வேலைக்காரி என்பதை மறந்து, எஜமானியப் பார்வையோடு அடுப்பேற்ற எழுந்தார். உடனடியாய் முகம் சுழித்தார்... சரக்கு மாஸ்டரையும், ஒல்லிச் சமையலாளியையும் அருவெறுப் பாய் பார்த்தார். அவர்களும் புரிந்து கொண்டு கழுத்தைக் குறுக்கி, தலைகளை கீழே தொங்க வைத்தார்கள்.சிதம்பரம் கோவிலுக்கு மேல் ஒரு கட்டிடமா..அம்மாவின் தலைக்கு மேல் ஒரு தலையா...
 அம்மாவும், இந்த இரு முதுபெரும் சமையாளிகளின் தலைக்குனிவை ரசித்தபடியே, சமையல் திட்டின் மேலுள்ள வெள்ளி அடுப்பில் சொருகப்பட்ட சந்தன கட்டைகளை கேஸ் லைட்டரால் பற்ற வைக்கப் போனார்... அப்போது பார்த்து ஆஜானுபாகு உடம்பை குறுக்க முடியாமல் கஷ்டப்பட்ட சரக்கு மாஸ்டர், தற்செயலாக எரிவாயு சிலிண்டர் திருகில் கை ஊன்றி, தன் வெயிட் முழுவதையும் அதில் போட்டு ஒருச் சாய்த்துக் கிடந்தார்.
 அன்னை, இதைகவனிக்காமல் விறகிற்குதீயிட்டார்.

அவ்வளவுதான் ..அந்த அறை முழுதும் தீப்பிடித்தது. அன்னையின் காட்டா மோட்டா உடையிலும் நெருப்பு பற்றியது. அவரிடமிருந்து, மரியாதையான தூரத்தில் நின்ற