பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 சு.சமுத்திரம் 0

 சேர்ப்பது போன்ற கூர்மையான அலகும், வெளுத்த மஞ்சள் உடம்பும், செஞ்சிவப்பு பிரடிக் கொண்டையும், கவுண் கம்பு போன்ற வாலும், வாலடியில் இரத்தச் சிவப்பு புள்ளிகளும், இந்த மரத்தை, இந்த மரங்கொத்திகளை அண்ணாந்து பார்க்க வைத்தது. ஆனால் இப்போதோ- 

 அந்த அழகான வண்ணத் தோப்பில், தென் கிழக்கு கோடியில் உள்ள இந்த மாமரம், வதைபட்டுக் கொண்டிருக்கிறது. எந்த மரங் கொத்திகள், தன்னை, பூச்சி, புழுக்களில் இருந்து காப்பாற்றும் என்று நினைத்ததோ, அதே மரங் கொத்திகள், அந்த மரத்தின் அனைத்து பகுதிகளையும் சல்லடையாக்கி விட்டன. அடிவாரத்திலும், கிளைகளிலும் முதலில் துளைகள் போட்டன. பின்னர் அந்த துளைகளைப் பொந்துகளாக்கின.பொந்துகளை, சுரங்கங்களாய் குடைந்தன. இந்த சுரங்கங்களிலும் சில, அந்த மரத்தின் மறு முனையை கிழித்துவிட்டன. அப்படியும் திருப்தி அடையாத

மரங்கொத்திகள், ஒவ்வொரு சுரங்கத்தின் மேல் பகுதி யையும், கீழ் பகுதியையும், அலகுகளால் கொத்திக் கொத்தி, நீக்குப் போக்கான முன் நாக்கால் கழிவுகளை வெளியே எடுத்துப் போட்டன. அதிலுள்ள பூச்சி புழுக்களை தின்று காட்டின...


  அந்த மாமரத்திற்கு, கால்களான வேர்கள் அற்றுப் போவது போன்ற பிராண வலி. அடிவாரமும், கிளைகளும் வலிப்பு வந்ததுபோல் வெட்டிக்கொண்டன. இதனால், அதற்கு மரண பயம் ஏற்பட்டது. அந்த அச்சத்தில், தனது அடிவாரத்தில், வாலை மூன்றாவது கால்போல் ஊன்றிக் கொண்டு, தத்தித் தத்தி மேலே வந்த தலைமை

மரங்கொத்தியிடம், கிளைக் கரங்களை வளைத்து கும்பிட்டபடியே மாமரம் மன்றாடியது.


 "..என்னை விட்டுவிடு மரங்கொத்தியே விட்டு விடு... நீ போடுவதோ மூன்று முட்டை. அதற்கு சிறு பொந்தே