பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

() ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 181

ஒன்றோடொன்று அடித்துக் கொள்ளும் மர்மம், இப்பொழு தான் எனக்குப் புரிகிறது. யார் உயரம் என்று என் முட்டாள் கிளைகள் போடும் அடிதடிஎன் கொப்புகளுக்கும் வந்துவிடக் கூடாது." இது வருவதற்கு முன்பே, நீ வெளியேற வேண்டும்..."

 அந்த தலைமை மரங்கொத்தியின் கண்கள் சிவந்தன... அலகுகள் துடித்தன. கத்திக்கத்தி பதிலடி கொடுத்தது.
நான் வெளியேறி விடுவேன் என்று பகல் கனவு காணாதே... உலகப் பறவைகளிலே சிறந்த பறவை என்று பட்டம் வாங்கியிருக்கிறேன். நான் சாதாரணப் பறவை அல்ல... தெய்வப் பறவை என்பதைப் புரிந்து கொள்... இதோ இந்த தோப்பின் வடக்குப் பக்கம் மலைப் பாங்கான உச்சியில், பறவைகளைப் பரிபாலனம் செய்யும் பறவைகளின் அரசான ராசாளி, என்னைப் பகைப் பார்வையாய் பார்ப்பதுபோல் காட்டிக் கொண்டாலும், அது என் குடும்பத் தோழன். இதை விரட்டி விட்டு பரிபாலனத்திற்கு வர நினைக்கும், 'பக்திப் பரவசமான கருடனும் எனக்கு நெருக்கமான நண்பன்... இந்த இரண்டையும் துரத்திவிட்டு கூட்டணி பரிபாலனம் செய்வதற்காக ஆயத்தம் செய்யும், - ‘ஏழு சகோதரிகள் என்று செல்லமாக அழைக்கப்படும் காட்டு பூணிக் குருவிகளும் என்னைக் காப்பதாய் வாக்களித்திருக்கும்போது, உன்னை நீ எப்படிக் காப்பாற்ற முடியும்? காற்று என்பக்கம்... கடலும் என்பக்கம்... நிலமும் என் பக்கம்... நீ அடங்கிப் போகவில்லையானால், நான் புயலாவேன்... பூகம்பம் ஆவேன்... எச்சரிக்கை... எச்சரிக்கை... இறுதி எச்சரிக்கை'...
 தலைமை மரங் கொத்தி, இறக்கைகளை அடித்து, உயரே எம்பி, மேலும், கீழுமாய் வளைவும் சாய்வுமாய் பறந்து, அடித்த இறக்கைகளை நிறுத்தி, அப்புறம் மீண்டும் அடித்து