பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 சு.சமுத்திரம் 0


அந்த மரத்திற்கு மேல் ஆல வட்டம் போட்டது... தொண்டு பறவைகளும், தாங்களும் ஆத்திரப்பட்டதாகக் காட்டிக் கொள்ள, அந்த மாமரத்தின் பொந்துகளை பலமாய்க் குத்தின... சில அந்த மாமரத்திற்காக அழுது கொண்டே கொத்தின...

 வேதனைதாங்காது, விம்மிப்

புடைத்த அந்த மாமரத்திற்கு விரக்தி ஏற்பட்டது. இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல் அந்த தோப்பைச் சுற்றுமுற்றும் பார்த்தது... அப்படி பார்க்கப் பார்க்க, வயிறு பற்றி எரிந்தது... கண்கள் ஏக்கமாயின... வேர்க்கால்கள் தடுமாறின...

 இந்தத் தோப்பு விசித்திரமான, வித்தியாசமான தோப்பு... எல்லாம் அடங்கிய தாவர சங்கமத்தின் ஏகப் பிரதிநிதி... இருபது வகைக்கும் அதிகமான தாவர ரகங்களைக் கொண்டது... இடையிடையே புல்வெளிகள்... பாலை நிலங்கள்... நீர் நிலைகள்... மலைப் பகுதிகள்... சதுப்பு நிலங்கள்... சூரியனை உள்ளே விடாத காடுகள்... சொல்லின் செல்வர் சத்தியமூர்த்தி சொன்னதுபோல், ஒரே மாதிரியான கழுதைத்தனமாய் இல்லாமல், பல்வேறு வித குதிரைத் தனமானவை... ஒரு கட்டை விரல் பருமனுள்ள ரீங்காரப் பறவை முதல், நிமிர்ந்தால் குதிரை மட்டத்தை எட்டும் தீக்கோழி உள்ளிட்ட இருபத்தேழு இனங்களைச் சேர்ந்த ஆயிரத்தி இருநூறு வகை பறவைகளைக் கொண்ட குட்டி பூமி... இந்த மாமரத்திற்கு தென் மேற்கே மைனாக் கால்களைப் போல் மட்டை கொண்ட பச்சை ஓலைகளைச் சுமக்கும் ஒயிலான தென்னை மரம்... தென் மேற்கு, வட கிழக்கு ஆகிய இரண்டு பருவக் காற்றுகள் தவிர, எந்தக் கொம்பன் காற்றுக்கும் ஆடாத தென்னை... இதன் அடிவாரத்தில் மொட்டைத் தலையும், மார்பில் தொங்கு சதையும் கொண்ட பெரு நாரைகள்... ஆகாய விமானம்