பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184 சு.சமுத்திரம் 0

நிலையில் குவளைச் செடிகளை வளைத்துக் கட்டிய கூட்டில் உள்ள ஒரு ஊதா நிற மயில் கோழி, ஒரு செடியை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு, தன் பெட்டையைப் பார்த்து வணங்குகிறது. இதே இனத்தைச் சேர்ந்த மஞ்சள் நிற மணற் கோழி, நீர் நிலைகளில் வயிற்று இறக்கைகளை ஈரமாக்கி, கட்டாந்தரையிலுள்ள கூட்டருகே வருகிறது... அங்குள்ள குஞ்சுகள், தாயின் இறக்கைகளை நக்கித் தாகம் தணிக்கின்றன...

 தாவரங்களை விட்டுவிட்டு, தரையில் கூடு கட்டும் இந்த பறவையைப் பார்த்து தவித்த இந்த மாமரத்திற்கும் ஒரு சின்ன ஆறுதல்... நேராய் வடக்கேயுள்ள, ஒரு முள் முருங்கை... கனத்த அலகுகளையும், அதன் அடிவாரத்தில் குத்து மீசையும் கொண்ட கண்ணான் பறவைகள் 'குடும்ப சகிதமாய்,... அந்த மரத்தையும் துளை போடுகின்றன.' இவற்றை துரத்திவிட்டு அங்கே போவதற்காக இன்னொரு வகையான பெரிய பச்சைக் கண்ணான் பறவை ஒரு விதவை போல் துடிதுடித்து பரபரக்கிறது...
இந்தச் சமயத்தில்'பறவைகளின்

காவல்காரன்'என்று கருதப்படும் கரிச்சான் குருவி, விளையாட்டாக நாய் போலவும், நரி போலவும், பூனை போலவும் குரலை மாற்றி மாற்றிக் கத்துகிறது... இதனால் முள் முருங்கையைக் குடையும் கண்ணான் பறவைகள் பதுங்குகின்றன.

 இந்த மாமரம், தனக்கு இப்படி ஒரு கரிச்சான் இல்லையே என்று ஏங்கியது, இந்த கரிச்சானைப் போல் இல்லாது. எங்கிருந்தோ வந்த இன்னொரு வகைக் கரிச்சானின் அடாவடியால்தான், இந்த மரங்கொத்திகள் தன் உடம்பில் ஏறின என்பதை நினைத்து, நினைத்து நெஞ்சம் குமுறியது. எதையும் பார்க்க முடியாமல் கண்களை மூடியது. சிறிது