பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

0 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 185


நேரம் கழித்து கண் திறந்தால், கண்ணெதிரே பல்வேறு வகையான பறவைகள்... "சீசன் வந்துவிட்டதால் பழைய இறகுகளை உதிர்த்து விட்டு, உடம்பிலுள்ள திரவச் சுரப்பிக் கசிவால் அந்த இறக்கைகளை கழுவி விட்டு, புத்தம் புது பொலிவோடு தோன்றின.

 'இப்போதுதான் உங்களுக்கு, கண் தெரிந்ததா...' என்று விம்மலுக்கிடையே கேட்ட மாமரம், அப்படிக் கேட்டுவிட்டு அழுதது... பிறகு எதிரேயுள்ள பறவைகளைப் பார்க்கப் பார்க்க, அதற்கு ஆறுதல் ஏற்பட்டது.
ஒரு பக்கம் குயில் கூட்டம்... காக்கா ஒல்லியானது போன்ற தோற்றம்... இந்த மாமரத்தில் வாழ்ந்த குயில்கள்தான் இவை... தொலைவில் இந்த தோப்புக்குச் சொந்தமில்லாத குண்டு கரிச்சான்களை ஆதரித்த குற்றத்திற்காக மரங்கொத்

திகளாலும், மயில்களாலும் விரட்டப்பட்டவை. இந்தக் குயில் கூட்டத்தின் பக்கம் ஒரு சர்வதேசப் பறவை.. இன்னொரு பக்கம் இதே குயிலினத்தில் ஒன்றானதும், சொந்தமாய் கூடுகட்டத் தெரிந்ததுமான செம்போத்துப் பறவைக் கூட்டம்... இதற்கும் பக்கபலமாக இன்னொரு சர்வதேசப் பறவை... இந்த இரண்டு கூட்டத்திற்கும் மத்தியில் தேசியப் பறவையான மயில் கூட்டம்.

 இந்த மாமரம் அந்த பறவைக் கூட்டங்களை ஒரே இனமாகக் கருதி முறையிட்டது.
'இந்த மரங்கொத்திகள் என்னைப் படுத்துகிற பாடு உங்கள் கண்களில் படவில்லையா' என் புலம்பலோ உங்கள் காதுகளில் ஏறவில்லையா... உங்கள் பொது எதிரியான இந்த மரங்கொத்திகளை துரத்துங்கள்... உங்களை நான் சுமக்கத் தயாராக இருக்கிறேன்... அதற்கு முன் ஒன்றாகச்