பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 சு.சமுத்திரம் 0

சேருங்கள்"...

 செம்பாக்கு நிற இறக்கைகளைக் கொண்ட செம்போத்துப் பறவை மாமரத்திற்கு இப்படி பதில் அளித்தது...
 "யார் கூடச் சேர்ந்தாலும் இந்த கபடமான குயில் கூட சேரமாட்டேன்... இதோ இந்த கிழட்டுக் குயில் தனக்கு, சொந்தமில்லாத காக்கைக் கூட்டில் முட்டையிட்டு, காக்கையாலேயே தன் குயில் குஞ்சை பிறக்க வைத்தது... அந்தக் குயில் குஞ்சும் காகத்தின் சொந்தக் குஞ்சுகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிப் போட்டுவிட்டது... காகக் குஞ்சுகள் செத்ததும், இந்தக் குயில் குஞ்சு அரங்கத்திற்கு வந்ததும்தான் மிச்சம்... இந்த கிழட்டுக் குயிலுக்கு, உன்னிடம், தான் உட்கார வேண்டு

மென்பதைவிட, தன் குஞ்சை உட்கார வைக்க வேண்டுமென்பதே நோக்கம்... இதைவிட அந்த மரங்கொத்தியே பரவாயில்லை"...

மாமரம் ஏதோ பேசப் போனபோது அதை இடைமறித்து, தலைமைக் குயில் பேசிற்று...
 "இந்த துரோகி செம்போத்தை நம்பாதே மாமரமே.. இது செய்த பாவங்களுக்கெல்லாம், நான் பழி சுமந்தேன்... சுமக்கிறேன்... இதற்கு உன்னையும் பிடிக்காது... என்னையும் பிடிக்காது... இதற்குப்

பிடித்ததெல்லாம் தொலைவாய் உள்ள ஏரித் தீவில் வாழும் குண்டு கரிச்சான்தான் பல குரலில் இசைக்கும் திறமை மிக்க இந்த செம்போத்து, குண்டு கரிச்சான் குரலை மட்டுமே ஒலிக்கிறது... இதைவிட அந்த மரங்கொத்தியே இருந்துவிட்டுப் போகலாம்"...

அந்த மாமரம் இப்போது தன் கொப்புகளையும், இலைகளையும் குறுக்கி நின்றது. இதைப் பார்க்க சகிக்காத தேசியப் பறவையான மயில் மரத்திற்கு ஆறுதல் சொன்னது.
'கவலைப்படாதே மாமரமே! உன்னுடைய இந்த