பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

○ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

189


‘தோழமைக்கு' பெயர் போன அந்த தென்னையும் ஆற்றுப் படுத்தியது.

"மாமரத் தோழா! மாமரத் தோழா!!", நான் சொல்லப் போகிற சில கசப்பான உண்மைகளை கவனமாகக் கேள்... பழம்பெருமை பேசிப் பேசியே பத்தாம் பசலியாய் ஆகிப் போன மரம் நீ... தாவரங்களிலே இளிச்சவாய் மரம் ஒன்று உண்டு என்றால், அது நீதான் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை... எந்த வகை மரத்திடமும் இல்லாத அளவுக்கு, இருபத்தோரு உயிரினங்கள் உன்னை இம்சிக்கின்றன... உன் பூவுக்குள் பூச்சிகள் முட்டையிட்டு, அவை மாம்பழத்திற் குள்ளும், அதன் கொட்டைக்குள்ளும், பூச்சிகளாய் உருமாறி, பழத்தை அழுக வைப்பதும் கொட்டையை பேடியாக்குவதும், உனக்குப் புரியுமா... மாவிலைத் தோரணம் என்று, நீ தம்பட்டமடிக்கும், உன் இலைகளின் பின்பக்கம் கொப்பளம் கொப்பளமாக இருப்பவை பற்றி அறிவாயா... அவற்றிற்குள், பூச்சிப் புழுக்கள் கூடு கட்டி, உன் இலைச்சத்தை உறிஞ்சுவதை கண்டாயா... பூஞ்செயான காளான்கள் புற்று நோய் போல், உன் உடம்புக்குள் ஊடுருவி, உட் பகுதியை உச்சி முதல் பாதம் வரை செல்லரிக்கச் செய்ததை உணர்ந்தாயா... இல்லாதவன் பெண்டாட்டி எல்லோருக்கும் அண்ணி என்ற மனிதப் பழமொழிக்கு தாவர உதாரணம் நீ... உன்னை, கொத்தும் இந்த மரங்கொத்திகளால் என்னையோ, அதோ அந்த பாக்கு மரத்தையோ கொத்திப் பார்க்க வரச் சொல் பார்க்கலாம்... அலகை உடைத்து விட மாட்டோமா... ஏற்கெனவே பலவீனப்பட்ட உன்னை அந்த மரங்கொத்திகளால் கொல்ல முடிகிறது... ஏற்கெனவே கொல்லப்பட்டகர்ணனை அர்ச்சுனன் கொன்ற கதைதான்"...

“இன்னொன்றையும் கேட்டுக் கொள் தோழா! எஞ்சிய பறவைகளின் சண்டையால், அந்த மரங்கொத்திகளே