பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௦ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 19


    முதியவர் வேகத்தோடு, பதிலடி கொடுத்தார்.
   "காளமேகம்... என்னைவிட வயசுல சின்னவர்தான்.ஆனால் அறிவுல அவரு ஒளி.என்பேரன....,தண்ணிப் பாய்க்கச் சொல்லிகையல மம்பட்டியை குடுத்தபோது அந்த புண்ணியவான் வந்து மம்பட்டியை தூக்கி எறியச் சொல்லி பள்ளிக்கூடத்துக்கு பயல அனுப்புனாரு. அவரு தெய்வமா நிக்கராரு,எனக்கு பொறாமை கிடையாது டா பரமசிவம் வீட்டில கூட அவரு போட்டோ இல்ல ஆனால், என் வீட்ல இருக்கு. பெரிய மனுஷன் பேரை கேவலப்படுத்திட்டான்னு நினைச்சிச் சொன்னேன். கெட்டுப் போறதுக்கு பந்தயம் வைக்கிறியா வைங்கடா வைங்க. எல்லாமே அல்பங்களா மாறிட்டியே ஒழிஞ்சி போங்க..."
     முதியவர் போய்விட்டார்.கூட்டத்தினர், ஐம்பெரும் விழாவிற்கு இசைவு கொடுத்தார்கள். ஒரே ஒருநபர் மட்டும் அதிருப்தி தெரிவித்தார்.
    “என்மவன்சிப்பாய்னு ஜனங்களுக்குத் தெரியும்.அவன் பாகிஸ்தான் போர்ல ஒரு காலை இழந்துட்டான்.இதுக்கு ஒரு பாராட்டு கிடையாதா?”
   ௰காடசாமி, இந்தக் கேள்வியைப் பாராட்டவில்லை!
   "கால் போறது....பெரிய காரியமா? அவன்...,தலைவிதி.... எங்க இருந்தாலும் போக வேண்டிய காலு போயிருக்கும்.இதுக்குப் போயி விழாவா விழான்னா ஒரு விஷயம் இருக்க வேண்டாமோ?"
   கூட்டம், மாடசாமி பேசியதை ஏற்றுக் கொண்டதுபோல் அமைதியாக இருந்தது. அல்லது, அது அமைதியாக இருந்ததை மாடசாமி தம் பாயின்டுக்கு ஆதரவாக எடுத்துக்