பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. சு.சமுத்திரம்


கொண்டார். உண்மையைச் சொல்லப் போனால் எந்த விழாவுமே ஊர்க்காரர்களுக்கு பிடிக்கவில்லை. என்றாலும், அதை வெளியே சொல்ல பயம்.அவனவன் பஞ்சாயத்துத் தலைவரிடம் வீட்டு வரியிலும், கூட்டுறவுத் தலைவரிடம் கடன் வகையிலும், கர்ணத்திடம் நிலம் வகையிலும் அகப்பட்டுக் கொண்டவர்கள். ஆகையால், கும்பலிலே இருந்த எல்லா கோவிந்தா சாமிகளும், அமைதியாக இருந்ததில் ஆச்சரியமில்லையாம். கூட்டம், இப்போது 'பட்ஜெட்டை' விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது.

    "இந்த மூவாயிரம் ரூபாய்ல ஐம்பெரும் விழாவையும் சமாளிக் முடியுமா?"
    "ஏன் முடியாது? போஸ்டர்கள் நம்ம பரமசிவம் டவுன்ல வச்சிருக்காரு சொந்த பிரஸ்ஸு. அதில அவரே அடிச்சித் தந்திடுவாரு...."
    "அப்படியும் பணம் உதைக்குமே?”
    “எப்படி உதைக்கும்? நம்ம ஊரு வாரச் சந்தைக்கு வந்த வெளியூர் வியாபாரிங்கக் கிட்ட அன்பளிப்ப வாங்கணும் தராதவன ஊருக்குள்ள நுழைய விடக்கூடாது."
    "அப்படி வச்சாலும்,கையை கடிக்கும்".
    "நம்ம மாட்டு வியாபாரிங்க கிட்ட நூறு,காண்டிராக்டர் கிட்ட முன்னூறு,நெல்லு வியாபாரிங்கிட்ட ஐநூறு....நன்கொடையா வாங்கிட்டாப் போச்சு".
    "நாங்க தரத் தயார்.ஆனால், வீட்டு வரியை பிரசிடென்ட் குறைக்கணும்' என்றார் வியாபாரிகள் தலைவர் மாட்டு வியாபாரி.