பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. ௱ க.சமுத்திரம்


   "கஜானா காலியாகிடுமே,
    'ஆகட்டுமே....விழாவைவிட கஜானா முக்கியமா?"
    "அது தான் சரி."
   ஊர்மக்கள் பயத்தாலும், நயத்தாலும், வேடிக்கை மனோபாவத்தாலும் ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டார்கள். அந்த ஊர் குளம் பத்து வருடத்துக்கு ஒரு தடடைவதான் பெருகும். இந்த ஆண்டு குளத்தில் கொஞ்சம் தண்ணீர் இருந்ததால், நஞ்செய் நிலமும், புஞ்செய் நிலமும் பயிர்களால் பச்சையாயின. குளத்தில் தண்ணிர் குறைவாக இருப்பதால், பயிர்கள் பட்டுப்போகுமோ என்ற ஒரு அச்சம், ஊர்மக்களுக்கு உண்டு. என்றாலும், தண்ணீரை அரிசி மாதிரி நினைத்து சிக்கனமாகப் பயன்படுத்தினார்கள்.
     இந்த சூழநிலையில்தான் ஐம்பெரும் விழா துவங்கியது.
     காட்டில் இருந்த தேக்குகளை வெட்டி பந்தல் போட்டார்கள். இன்னும் ஒரு மாதத்தில் குலை விடப் போகும் வாழைகளை வெட்டி பந்தலில் கட்டினார்கள். கரும்புகளை வெட்டி முக்கியமான வீதிகளில், வளைவுகளில் போட்டார்கள். ஆக பயிர்களில் பெரும்பான்மை சர்வநாசம். சில வாழைகளும், கரும்புகளும் சந்தடியில்லாமல் சில ஆசாமிகள் வீட்டுக்கும் போய்விட்டனவாம். ஊரில் பெண்களுடைய சேலைகளையும், ஆண்களுடைய வேட்டிகளையும் எடுத்து பானர்கள் உருவாயின. பரமசிவத்தின் பிரஸ்ஸில் உருவான போஸ்டர்கள் வெளியூர்க்காரர்கள், வண்டி வண்டியாகக் குவிந்தார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால், எங்கும் விழா எதிலும் விழா. ஐம்பெரும் விழா
    முதல்நாள் வெற்றிவிழா; சென்னைக்குப் போய் மீண்ட