பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 23


பரமசிவத்துக்கு "சென்னை மீண்டுவந்த செம்மல்" என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இரண்டாவதுநாள், கலை விழாவில், பத்துநாள் வெற்றிகரமாக படம் ஓடக்காரணமான கண்ணனுக்கு பொன்னாடை, மூன்றாவது நாள் இலக்கிய விழா, காட்டாம்பட்டியைக் காட்டிய காசிக்கு ஒரு பேனா பரிசாக அளிக்கப்பட்டது. நாலாவது நாள் வீரவிழா. புறநானூற்றில் கூறப்படும் வீரத்தின் விளைநிலம்போல், கள்ளத்தேங்காய் கையோடு கொண்டுவந்த சாமிக்கண்ணுக்கு தேங்காய் நாரால் செய்யப்பட்ட கேடயம்; இறுதியாக, காலமான காளமேகத்திற்கு நினைவு விழா. ஊர்க்கார்கள் கிணறுகளில் பம்ப் செட் கட்டுவதற்காக வைத்திருந்த சிமிண்ட்களை எடுத்து, நினைவு மேடை அமைக்கப்பட்டது. நினைவு விழாவில் பேசியவர்கள், காளமேகத்தை மறந்து, பரமசிவத்தையே பேசியதாக ஒரு புகாரும் லேசாகத் துவங்கியதாம்.

   இந்தச் சயமத்தில் காடசாமியும், மாடசாமியும் ஒரு யோசனை சொன்னார்கள். ஒரு காலத்தில் அந்த ஊரை, அந்தகக் கவி ஒருவன் "கலங்கா நீர்சூழ்" காடாம்பட்டி' என்று பாடி இருக்கானாம். பண்டைப் பெருமையை படம் பிடித்துக் காட்ட வேண்டாமா? ஆகையால், கால்வாசி தண்ணீர் கொண்ட குளத்தை வெட்டி, நீரை ஊரின் நாலு பக்கமும் விட்டார்கள். சிலர் இதை எதிர்த்தார்கள். நிலம் இல்லாத காடசாமி குதித்தார்.
  "அட மடப்பயங்களா... பயிர் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும்,பயிரை விடலாம். நம்ம பழைய பெருமையை விட முடியுமா...?இந்த ஊர்ல ஒரிஜனல் குடும்பத்தைச் சேர்ந்த எவனும் இதை எதிர்க்க மாட்டான்"
  அந்த ஊர்க்காரர்கள் அனைவருக்கும் தாங்கள் ஒவ்வொரு