பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 க.சமுத்திரம் o

வரும் ஒரிஜனல் என்று நினைப்பு. ஆகையால் "கலங்கா நீர்சூழ்" காட்டாம்பட்டியைச் சுற்றி தண்ணிர் பெருகியது.

  பொதுமக்கள் விழாக்களில் லயித்து வயல்களுக்கு போக மாட்டார்கள் என்பதை அறிந்த காடசாமியும், மாடசாமியும் இரவோடு இரவாக கையாட்களுடன் வயல்களுக்குப் போய் சவலைப்பிள்ளைகள் போல் நின்ற நெல்லையும, கரும்பையும் அறுவடை செய்து அகற்றினார்கள். குளத்துத் தண்ணீர் திறந்து போனதால், எப்படியும் வாடப்போகிற பயிர்களை சுருட்டுவதில் தவறில்லை என்றும் சொல்லிக் கொண்டார்கள். இன்னும் ஒருவன் கூட வயல் பக்கம் போகாமல்  விழாவிலேயே இருக்கிறார்கள்.
     எப்படியோ இந்த விழாவினால் "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த காட்டாம்பட்டி" பதினெட்டுப் பட்டிகளிலும் தலைசிறந்த பட்டியாக விளங்குகிறதாம்.





          -தாமரை -டிசம்பர் 1974.