பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஒரு மாமரமும் பல மரங்கொத்தி பறவைகளும்❍

27

நாலா பக்கமும் நாட்டப்பட்ட கம்பங்களில் கட்டப்பட்ட, ஒலி பெருக்கிகள் கக்கிய ஜெயலலிதா அம்மன் பக்திப் பாடல்கள்; ஆதிபராசக்தியின் ஆதாரமான ஜெயலலிதா தேவியின் திருமகிமைபற்றி, முன்னாள் 'மாண்புமிகு” டாக்டர். கா.காளிமுத்து, அழகு தமிழில் அற்புதக் குரலில் வழங்கிய விளக்கங்கள்...கலியுக நாயகி, தன்னைத்தடுத்தாட் கொண்ட அருள் பாலிப்பை சொல்லும் போது மட்டும், அவர் குரல் தழுதழுத்தது. மற்றபடி மாணிக்கக் குரல். இவருக்கு இணையாய் காமிரா வெளிச்சங்கள். ஆங்காங்கு டி.வி. பெட்டிகளில், அன்னையின் அற்புதங்களை விளக்கும் வீடியோ படங்கள்...

கூட்டம் 'அம்மா...அம்மா.... என்றும் தாயே... தாயே..என்றும் கணணிர் மல்கி, என்புருகி, மெய்சிலிர்த்து, அலைமோதிய திசைக்கு எதிரே, சாமியானாவால் ஒரு கூம்பு வடிவக் கோயில் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு வேலியாக, இன்னொரு சாமியானா வெளிச்சுற்று..... கூம்புக் கோவிலின் நடுநாயகமான இடத்தில் ஆறடிப் பீடம்..அதில் அன்னை ஜெயலலிதா அம்பாளின் 'இருந்த கோல திருவுருவப் புகைப்படம்; லேசாய் ஒருச் சாய்ந்து, கைகள் இரண்டையும் வலது பக்கமாய் நீட்டி, உள்ளங்கைகளை ஒன்றாய்ச் சேர்த்து, வீதிதோறும் காட்சி தருவாரே அன்னை அப்படிப்பட்ட வடிவிலான லேமினேட்டட் படம். தன்லக்கு மேல் மின்சார ஒளி வட்டம் - காலடியின் இருபக்கமும் குத்து விளக்குகள் படத்தின் இருபக்கமும் கட்டவுட் சிங்கங்கள். பீடத்தின் முன்பக்கம் மூங்கில்களால் வளைத்துப் பிடித்த இடத்தில், அர்ச்சகர்கள் ஒரு பக்கம், ஒதுவார்கள் மறுபக்கம்... கோவில் முகப்பில், நவீன துவார பாலகர்களான இரண்டு ஏ.கே. 47 வீரர்கள்.... சும்மா சொல்லக்கூடாது. அன்னையாம் ஜெயலலிதாவின் திருவுருவப் புகைப்படம், சாயிபாபா சுவாமிகளின் பெண்