பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 சு.சமுத்திரம்

டில்லியில் படித்த செல்வகணபதிக்கும் ஒரு சந்தேகம்-நாவலரிடமே கேட்டார்.

'இதையெல்லாம்... மக்கள் நம்புவார்களா...."

'இந்த மாதிரி பதவி இழப்பு சந்தேகம் ஒனக்கு வரப்படாதுப்பா-நம் மக்கள் யார்? கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தவர்கள். ஒவ்வொருத்தனும் தன்னை அறிவாளியாக நினைப்பவன்.ஆகையால் அவர்கள் எதையும் நம்புவார்கள்-இல்லையா எஸ்.டி.எஸ். ?”

'சரிதான் நாவலரே-சைவத்தில் இருந்து சமணத்திற்குப் போய்விட்டு, கடைசிக் காலத்தில் மீண்டும் சைவம் வந்தாரே அப்பர் அடிகள்-அவரின் நவீன அவதாரம் தாங்கள் என்றால் தப்பா'

'தப்பில்லை எஸ். டி.எஸ்; அதே போல் ஈஸ்வரனால் கண்ணிழந்து, ஈஸ்வரியால் மீண்டும் கண்பெற்ற சுந்தரர் நீ-ஆண்டான் அடிமை தத்துவத்தின் உட்பொருளான மாணிக் கவாசகரின் மறு அவதாரம் நம் சேடப்பட்டி..."

சைவ சமயக் குரவர் லிஸ்டில் ஒரு வேகன்ஸி இருப்பதையும், அதைக் கைப்பற்றும் நோக்கத்தோடும், கே.ஏ.கே.யும், ஆர்.எம்.வீ.யும் போட்டி போட்டுக் கேட்டார்கள்.

'சம்பந்தர் யார்?

'சந்தேகம் இல்லாமல் குற்றாலீஸ்வரன்

அமைச்சர் செங்கோட்டையன் கோபமாய் கேட்டார்.

'அமாவாசைக்கும்-அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்