பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

o ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 'இருக்கு-இருக்குது-சிறுபிள்ளையான திருஞானசம் பந்தரான சைவத் தளபதி பார்வதி தேவியின் ஞானப் பாலால் ஞானம் பெற்றார்... குற்றாலீஸ்வரனோ, நமது எல்லாம் வல்ல தெய்வத்தின்கட்டவுட்டைப் பார்த்துப் பார்த்தே நீச்சல் சித்தி பெற்றான். இதிலென்ன தப்பு-தென்னவன், அந்தப் பையன் கிட்ட எதுக்கும் முன் கூட்டியே ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்குங்க..." கு.ப.கிருஷ்ணன், மனது கேளாமல் மனுப்போட்டார். "புரட்சி தெய்வத்தின்-கேவலம் ஒரு வறட்சியான புகைப்படம்-கட்சியின் கடைக்கோடி தொண்டரான, இந்த ஊர் பக்கிரிக்கு சொந்தமானது-அவனுக்கும் ஒரு சின்னச் சிலையாய்” - மதுசூதனன் அடித்துப்பேசினார். 'ரேடியோ கேட்போம்... ஆனால் அதைக் கண்டுபிடிச்சவனைத் தெரியுமா? அரசியல் சாசனத்தின்படி பதவி ஏற்போம். அந்த சாசனம் என்னென்னு தெரியுமா? பக்கிரியாவது கிக்கிரியாவது-அவனுக்கு விளம்பரம் போட்டால்-நம் தெய்வம் நம்மளுல ஒருத்தரை நீக்கிட்டு-அவனை அமைச்சராய் போட்டுடப்படாதே' அமைச்சர்கள் வாயடைத்த போது, அதையும் மீறி முத்துசாமி கேட்டார். 'அப்போ-நம் எம்.பி.க்கள். எம்.எல்.ஏக்கள் 'கோபுரம் கட்டும்போது கவனிக்கப்படுவார்கள். சரி-சரி-அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள் கொண்ட நாயன்மார் லிஸ்டை இங்கேயே தயாரித்து அம்மாவுக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம். நல்ல வேளை பழைய