40
சு.சமுத்திரம் ❍
நாயன்மார்லிஸ்டில் காரைக்கால் அம்மையார் இருந்ததால் இந்திரகுமாரி தப்பித்தார்." நாவலர், இந்த போடு போடுவதைப் பார்த்துவிட்டு, அனைவரும் சிரித்தபோது, கி.வீரமணி அவர்கள் கருப்புச் சட்டையோடு வந்து கோபமாய் நின்றார்.
'இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை? ஆனாலும் சொல்கிறேன்- சமூக நீதி காத்த வீராங்கனைக்குக் கோயிலேழுப்ப, எனக்கேதும் தடை யில்லை. ஆனால் அந்த கோவிலின் அர்ச்சக-ஒதுவார் நியமனத்தில், நிச்சயமாய் 60 சதவிகிதம்- தாழ்த்தப் பட்ட-ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு வேண்டும்'
'அப்படியே ஆகும். அப்புறம் நாங்கள் தயாரிக்கும் நாயன்மார் லிஸ்டில்-ஒங்களை சேர்க்க எங்களுக்கு ஒரு ஆசை தான் பெற்ற பிள்ளையை ஈஸ்வரனுக்கு சமைத்துக் கொடுத்த சிறுத் தொண்டரின் அவதாரம் நீங்கள்.அவர் பரஞ்ஜோதி என்ற அந்தக் கால தளபதி-நீங்கள் மானமிகு” இந்தக் கால தளபதி; என்ன சொல்கிறீர்கள் வீரமணி நாயனார் அவர்களே
'நாவலரான நீங்களும்-மானமிகு நானும், ஒரே பாசறையில் உதித்தவர்கள். நீங்கள் மூத்தவர். உங்கள் சொல்லைத் தட்டுவானா இந்தப் பெரியார் சீடன்
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும்
மரியாதைக்குரிய வீரமணியும், வணக்கத்திற்குரிய சேடப்பட்டியாரும் இரு பக்கமும் சூழ, அமைச்சர் பெருமக்கள், வெளிப்பக்கம் உள்ள விழா மேடைக்கு வந்தார்கள். நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின், குங்கும