உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

41

நாயகி என்ற நாடகம், துவங்குவதற்கு சிறிது நேரமே இருந்தது (இந்து அறநிலையத் துறையின் ஏற்பாடு).

அந்த மேடையில் ஏறி, நாவலர் நாடக பாணியில் பேசினார்.

'கோடி கோடி அண்டங்களை விநாடி விநாடியாய் படைக்கும் சக்தி, நம் புரட்சித் தெய்வத்தின் புகைப் படத்திற்குக் கூட உண்டு என்பது, உள்ளங்கை நெல்லிக் கனியாகி விட்டது. இப்படி 'சக்தி கொண்ட குங்குமம் கொட்டியாம்' நம் புரட்சித் தெய்வத்திற்கு அங்கிங் கெனாதபடி எங்கும் நிறை அம்மனுக்கு அம்பாளுக்கு இங்கேயே கோவில் எழுப்பப் போகிறோம், நீங்கள் இப்போதே வசூலில் இறங்கி... கோவில் நிதி கொடுக்க வேண்டும் என்று உள்ளபடியே கேட்டுக் கொள்கிறேன்...'

நாவலரின் பேச்சை இரைச்சலோடு பேசியபடியே கேட்டுக் கொண்டிருந்த சில புத்திசாலிகள் 'வசூல்' என்றதும் உஷாராகி ஆளுக்கு ஆள் விபரம் சொன்னார்கள்.

‘எங்கள் வீட்டு ஜெயலலிதா அம்மாவின் படத்திலும் குங்குமம் கொட்டுது'

‘எங்கள் வீட்டு புரட்சித் தலைவியின் படத்தில், குங்குமத்தோடு விபூதியும் சேர்ந்து கொட்டுது'

'அடப் போங்கய்யா... எங்க வீட்டுக் காலண்டரில் எழுந்தருளிய தமிழ்த் தாயின் படத்தில் இருந்து குங்குமம் மட்டுமா கொட்டுது-அந்தந்த நாளைக்கு ஏற்ப காலண்டர் தாள் தானாய் சுருங்குது. எங்க ஊர்லயும் கோவில் கட்டணும்-இதுக்கு அரசு உதவி வேணும்.'