பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 சு.சமுத்திரம் 0 ‘எங்க ஊர்லயும்... எங்க ஊர்லயும்... ‘எங்க டவுனுலயுந்தான்'

  கூட்டம், இப்போது அலை மோதியது. அமைச்சர்கள், மனித சங்கமத்தில் மூழ்கப் போன வேளை; இந்திரகுமாரி அழுதே விட்டார். இந்தச்சமயத்தில், அருகே நின்ற ஐ.ஏ.எஸ். ஒருத்தர், நாவலர்காதைக் கடிக்க, அவர், அதை, தமக்கே உரிய நாநயத்தோடு, மைக்கில் உரைத்தார்.
  'ஓடுங்கள்... ஓடுங்கள்... உங்கள் வீட்டில் இருக்கும், ஆயிரம் கோடி சூரியன்களை உச்சித் திலகமாகக் கொண்ட நம் தெய்வத்தின் புகைப்படத்தில் இருந்தும் குங்குமம் கொட் டலாம்... யார் கண்டது...? தங்கம் கூட பவுன் பவுனாய் விழலாம்... அப்படி நேர்ந்தால், அம்மனுக்கு உடனடியாய் ஆலயம் எழுப்ப வேண்டும்.

'ஓடுங்கள்... ஓடுங்கள்... உங்கள் காட்டில் மழை பெய்யும் என்ற ஒரே ஒரு மகிழ்ச்சியில் ஓடுங்கள்...

  அந்தக் கூட்டத்தினர், அத்தனை பேரும், சொல்லி வைத்ததுபோல், வந்த வழியிலேயே திரும்பி ஓடினார்கள். இந்நேரம் தத்தம் வீட்டில் குங்குமம் கொட்டியிருக்கும் என்ற அனுமானம்... ஒருவேளை தங்கம் என்ன... வைரமே வந்து விழலாம் என்ற எதிர்பார்ப்பு... அப்படியே விழவில்லை யானாலும், ஜெயலலிதா அம்மனுக்கு கோயில் கட்டி விட்டால், தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற நம்பிக்கை...
  மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிரித்துக் கொண்ட போது, மக்கள் பைத்தியம் பிடித்தது போல் தலைதெறிக்க

'பின்னோக்கி' ஓடிக் கொண்டிருக்கிறார்கள். -தாமரை - பிப்ரவரி 1995