உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள்



ழனிச்சாமி, சாப்பிடும் போதும் பேச மாட்டார். சாப்பிடுகிறவர்களிடமும் பேச மாட்டார். அப்படிப்பட்டவர், காலங் காலமாய் கடைப்பிடிக்கும் இப்படிப்பட்ட பழக்கத்தையும் மீறி பேசி விட்டதில், ஆனந்தவல்லியம்மா, பெயருக்கேற்ப பரவசமானாள்.

எவர்சில்வர் தட்டில் நிழல் காட்டிய இட்லிகளில் ஒன்றை, ஒரு கிள்ளுக் கிள்ளி, அதை எள்ளுத் துவையலில் ஒரு தள்ளுத் தள்ளி, கத்தரிக்காய் சாம்பாரில் ஒரு முக்கு முக்கி, வாய்க்குள் திணித்து விட்டு, அதற்கு உடன் போக்காக, ஒரு டம்ளர் தண்ணீரையும் உள்ளே அனுப்பி விட்டு, இப்படி விமர்சித்தார்.

‘சும்மா சொல்லப்படாது… ஆனந்தம்மா… முக்கனிச் சாறு பிழிந்துன்னோ… தேனோடு பால் கலந்தாப் போலன்னோ… பாடுவார்களே… அப்படிப்பட்ட டேஸ்டுப்பா…’

ஆனந்தவல்லி, ஒரு படைப்பாளி. எப்போதாவது, தனது படைப்பில் தானே பூரித்துப் போவது போல், புளகாங்கிதமாகி, புன்சிரிப்போடு கேட்டாள்.

‘எள்ளுத் துவையல… இன்னும் கொஞ்சம் வைக்கட் டுமா… ஒங்களுக்காகவே அரைச்சது’