பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சு.சமுத்திரம்

'நீ ஒருத்தி. நான் எள்ளையும் சொல்லல... எண்ணெயயும் சொல்லல... குடித்த தண்ணீரச் சொன்னேன். காவிரிய குடிச்சிருக்கேன். யமுனாவ விழுங்கி இருக்கேன். ஆனால் இந்த மெட்ராஸ் மெட்ரோ வாட்டர் டேஸ்டு வராதுப்பா... அடேயப்பா.. இன்னும் ஒரு செம்பு நிறைய கொண்டு வாப்பா...' ஆனந்தவல்லி, அந்தப் பெயருக்கு எதிர்மாறான உணர்வோடு, சமையல் அறைக்குப் போய், ஒரு பால் செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து, அவரை அடிக்காத குறையாக வைத்தாள். அதற்குள் ஒரு டெலிபோன்சத்தம். ஒரு துஷ்டக் குழந்தையின் குவா குவா சத்தம் மாதிரி. ‘பெட்ரூமுக்குள் இருந்த டெலிபோனை எடுத்த ஆனந்தவல்லி, இடையிடையே 'அய்யய்யோ... அட கடவுளே... என்று சொல்லிவிட்டு, ஓ மை காட் என்று அதற்கு ஆங்கில அர்த்தமும் சொன்னாள். பிறகு அவசர அவசரமாக, கணவர் பக்கம் ஓடிவந்து, அவர் வாய்க்குமேல் கவிழ்ந்த செம்பை பலவந்தமாகப் பறித்து ஜன்னலுக்கு வெளியே நீரை வீசிக் கடாசினாள். அந்த வேகத்தில், பால் செம்பு, ஜன்னல் கம்பியில் மோதி, ஒரு டப்பாங்கூத்து சத்தத்தை எழுப்பியது. பழனிச்சாமி, காரணம் கேட்குமுன்பே, ஆனந்தவல்லி, வாந்தி எடுக்கப் போவதுபோல் வாயை கோணல் மாணலாய் வைத்துக் கொண்டு கணவரையும் அறுவெறுப்பாய் பார்த்தபடியே விவரித்தாள். 'மெட்ரோ தண்ணியும் சாக்கடைத் தண்ணியும் ஒண்ணாக் கலந்துட்டாம், ஜானகி மாமி. போன்ல சொல்றாள். தண்ணீர் ஒரு மாதிரி பிசுபிசுன்னு இருக்குதேன்னு. மாமியே... இங்குள்ள மெட்ரோ பிராஞ்சுக்கு போன் செய்து