உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

45

கேட்டாளாம். அங்குள்ள அரிச்சந்திரங்க... மூணு நாளைக்கு முன்னே கலந்துட்டுதே... இப்போதான்... ஒங்களுக்கு தெரிஞ்சுதாக்குமுன்னு திருப்பி கேக்குறாங்களாம்...' பழனிச்சாமி, இப்படிப்பட்ட தண்ணீரிலாக் குளித்தோம்-குடித்தோம் என்கிற மாதிரி தனது உடம்பை தடவி விட்டார். வாயை அகலமாக்கினார். பிறகு ஆத்திர ஆத்திரமாய் எழுந்து, அவசர அவசரமாய் பேண்டைப் போட்டுவிட்டு, சட்டையை மாட்டப் போனபோது, ஆனந்தம்மா இடைமறித்தாள். அவரது சட்டையைப் பிடுங்கி, தனது கைக்குள் வைத்துக் கொண்டு கேட்டாள். “எங்கே புறப்படுறிங்க' 'மெட்ரோ வாட்டர் ஹெட்குவார்ட்டர்ஸ்-க்கு... அவங்கள உண்டு இல்லைன்னு பார்க்கணும்'. 'ஒங்களத்தான்.அப்படி ஆக்குவாங்க... எதுக்குங்க வம்பு... நம்ம செர்வண்ட் மெயிட் கிட்ட அஞ்சு ரூபாய நீட்டினால்... அந்த அடுக்கு மாளிகையில் போய் போர் வாட்டர் கொண்டு வந்துட்டுப் போறாள்' 'இவ்வளவு கால தாம்பத்தியத்துலயும்... நீ என்னை புரிஞ்சிக்கலே ஆனந்தம்மா... எனக்கு நல்ல தண்ணீர் கிடைக்கலன்னு நான் ஆத்திரப் படுறதா நீ நினைச்சால்... அது தப்பு... சாக்கடை தண்ணீர் கலந்து மூணு நாள் ஆகியிருக்கு... அப்படியும் நம்ம கவர்மென்ட்டோ... அல்லது மெட்ரோ காரங்களோமக்களுக்குத் தெரியப்படுத்தல... இந்த ஏரியாவுல இருக்கிற ஐயாயிரம் பேர்ல... குறைஞ்சது நாலாயிரத்து தொளாயிரம் பேரு... இந்த நாற்றம் பிடிச்ச தண்ணீரைக் குடிச்சிட்டு ஜான்டிஸ்ல அவஸ்தப்படப் போறாங்க... காலராவுல சாகப் போறாங்க... இதைப் பார்த்துட்டு நான்