பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சு.சமுத்திரம்

சும்மா இருக்கணும் என்கிறியா... சாக்கடை தண்ணி கலக்குறது... மனித முயற்சிக்கு மீறினதுன்னே வச்சுக்குவோம்... இந்த அதிகாரிங்க, டேங்கர்ல, தெருத்தெருவா தண்ணீர் கூட தரவேண்டாம். குறைந்தபட்சம் தண்ணீரை குடிக்க வேண்டாமுன்னாவது தெரியப்படுத்தணும் இல்லையா...' "அப்படிச் சொல்லாதவங்க கிட்ட பேசறது... பாறையில் மோதினது மாதிரி. பேசாமல்... நம்ம வெல்பர் அசோஸியேஸன் கிட்ட சொல்லலாம்.' 'இவங்களா... பெட்டிஷன் போடுறதுபற்றி ஆலோசிக்க நிர்வாகக் கமிட்டியை கூட்டலாமுன்னு சொல்லுவாங்க. அந்த கமிட்டி கூடுறதுக்கும்... ஒரு வாரம் நோட்டீஸ் கொடுக்கணுமுன்னு பைலா விதிகளை பேசுற பன்னாடைங்க... பேசாமல் சட்டையைக் கொடு” 'ஏன் இப்படி எக்ஸைட் ஆகிறிங்க? இங்க உள்ள பிராஞ்ச் ஆபீசுக்கே போன் போட்டு கேட்கலாம். திருப்தியான பதில் இல்லாவிட்டால்... போர் வாட்டர் இருக்கவே இருக்குது..." 'ஒன்கிட்ட மனுஷன் பேசுவானா... போன பிறவியில கிளியா பிறந்திருப்பே... சரி... சரி... அந்த பிராஞ்ச் ஆபீஸ் டெலிபோன் நம்பரையாவது கொடுப்பா...' பழனிச்சாமி, மனைவி கோடு கிழித்துக் காட்டிய டெலிபோன் எண்களைச் சுழற்றப்போனார். ஆனாலும் விரல்கள், டயலிலேயே நின்றன. ஐந்து நிமிடம்... பத்து நிமிடம்... பொறுமை இழந்து வலியப் பேசினார். “ஹலோ... நான் கொஞ்சம் அவசரமாய் பேசணும்... தயவு செய்து டிஸ் கனேக்ட் செய்துட்டு... அப்புறம் டயல்