பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

47

செய்யுங்க... ரொம்ப அவசரம் தம்பி... இந்தாம்மா... நீயாவது தம்பிக்கு சொல்லும்மா... அடி செருப்பால... நானும் வேணுமுன்னா.. ஒங்க, ஸ்வீட் நத்திங்கை ரசித்து கேட்கலாமா... ஏம்மா... நீயும் ஒரு பெண்ணா. அவனோட சேர்ந்து நீயுமா சிரிக்கே... என்ன... நான் ரசனை இல்லாத முண்டமா... அடேய்...' ஆனந்தவல்லி, அந்த டெலிபோனை கணவனிடம் இருந்து பறித்து, தனது காதில் வைத்தாள். பிறகு டக்கென்று கீழே வைத்தாள். இப்படி எடுப்பதும், வைப்பதுமாக, கஜினி முகமதுவைவிட ஒரு தடவை அதிகமாக வைத்துவிட்டு, கடைசியில் 'அப்பாடா... பேசி முடிச்சுட்டாங்க... லைன் கிடைச்சுட்டு' என்றபடியே டயலைச் சுழற்றினாள். 'ஹலோ கேட்டபோது, பழனிச்சாமி, அந்த டெலிபோன் குமிழை தன் வசமாக்கிப் பேசினார். “ஹலோ... என் பேரு பழனிச்சாமி. மூணாவது கிராஸ்ல நாலாம் நம்பர். டெல்லி செக்கரட்டேரியட்டுல... ரிட்டயர்ட் டெப்டி செக்கரட்டரி... வாறேன்... விஷயத்துக்கு வாறேன்... மூணு நாளாய் ஏழை ஜனங்க... சாக்கடைத் தண்ணியக் குடிக்கிறாங்க... எஸ்... எஸ்... ஒங்களுக்கு தெரியுமுன்னு எனக்கும் தெரியும்... நீங்க... ஏன் மக்களுக்கு தெரியப் படுத்தலை என்கிறதுதான் என் கேள்வி... அது ஒங்க டூட்டியில்லையா... அப்போ எதுக்காக இருக்கீங்க...? தம்பி... கொஞ்சம் மரியாதையா பேசப்பா... ஹலோ... ஹலோ...' பழனிச்சாமி, டெலிபோன் குமிழை, ஒரு நிமிடம் வரை காதோடு காதாய் வைத்துவிட்டு, மனைவியைப் பாராமலே, காலிப் பயல்க... கட் பண்ணிட்டாங்க... சரி... சரி... சட்டையைக் கொடு... ஸ்கூட்டர் சாவியை எடு...' என்றார். 'கடைசியில், காமாட்சி மாமி. டில்லியில சொன்னது