பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



64

சு.சமுத்திரம் 0

இருக்கலாமே.. இவர்களா.. எழுப்புவார்கள். அது யார். அடடே... மாப்பிள்ளையா..

வாசலுக்குள் நுழைந்த தனது வக்கீலிடம், கடல்மணி, துள்ளிக் குதித்துப் போனார். சீனிவாசனை முகத்தால் சுட்டிக் காட்டிப் பேசினார். வக்கீல், அவரை முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு, முருகன் போல், கையால் அபயம் கொடுத்தார்.

நீதி பரிபாலனம் துவங்கிற்று..

நீதிமேடைக்குக் கீழே, பக்க வாட்டில் போடப்பட்ட நாற்காலியில் உட்காராமலே, உதவியாளர்பெண், ஒவ்வொரு கட்டாக, மாண்புமிகு நீதிபதிகளின் முன்னால் வைத்து விட்டு, சம்பந்தப்பட்ட வக்கீல்களைப் பார்க்கிறார். அவர்கள் எழுந்து நிமிடக் கணக்கில் வாதாடுகிறார்கள். நீதிபதிகளில் ஒருவர் வினாடிக் கணக்கில் பேசி, முடிவைத் தெரிவிக்கிறார். கடல்மணி, ஒவ்வொரு கட்டையும், மூச்சைப் பிடித்துப் பார்க்கிறார். அது, தன் கட்டு அல்ல என்றதும் ஒரு ஏமாற்றம்.. கூடவே ஒரு சந்தோஷம். எதிர்பார்ப்பே ஒரு இனிய சுகம் கொடுக்கும் போது, அந்த தீர்ப்பு தீர்த்து கட்டிவிடக்கூடாது என்ற அடிமன பயமே, வெளிமன சந்தோஷ வெளிப்பாடானது.

ஒரு மணி நேரம் கழித்து, உதவிப் பெண், வழக்கம்போல் ஒரு கட்டை எடுத்து, நீதிமேடையில் பயபக்தியோடு வைத்துவிட்டு, கடல்மணியின் வக்கீலை முரட்டுத்தனமாய் பார்க்கிறாள்.அவர் எழுகிறார். கடல்மணி மூச்சைப் பிடிக்கிறார். மூர்ச்சையாகப் போகிறார். பிறகு தட்டுத் தடுமாறி எழுந்து, தனது வக்கீலின் முதுகுப் பக்கம் போய் நிற்கிறார். அவர் வாதாடுவதற்கு வாயைத் திறக்கும் முன்பே