பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



0 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

65

வலதுஇருக்கை நீதிபதி தலையிடுகிறார்.

"ஓட் இஸ் திஸ்? டிரான்ஸ்பர் கேஸா. அரசாங்க மாற்றல் உத்திரவுகளில்.. நடுவர் மன்றம் பொதுவாக தலையிடக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி இருப்பது தெரியாதா?”

தெரியும் மை லார்ட்.. ஆனாலும் உச்ச நீதிமன்றம் 'பொதுவாக’, என்ற சொல்லைத்தானே பயன்படுத்தி உள்ளது? மை லார்ட்.. என் கட்சிக்காரர் அவரது நேர்மைக்காக தண்டிக்கப் பட்டிருக்கிறார்."

'டிரான்ஸ்பர் தண்டனையாகாதே. நல்ல எக்போஷர் தானே.. அரசு ஒரு தாய் மாதிரி.. வளர்ந்து விட்ட பிள்ளைகளை, மாடு முட்டித் துரத்தும்..கோழி கொத்தித் துரத்தும். அரசு டிரான்ஸ்பர் ஆர்டர் போடும்..”

'நிசந்தான் மை லார்ட்.. இந்த ஒரு தாய் பிள்ளைகளில்" பலர் இருபதாண்டு கால வளர்ச்சிக்குப்பிறகும், இங்கேயே இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களைச் சொல்லட்டுமா...'

'இது எங்களுக்கு சம்பந்தப் படாத விவகாரம்.. ஒங்கள். கட்சிக்காரரை பற்றி மட்டுமே பேசுங்கள்...'

'எஸ் மை லார்ட்.. நீங்கள் குறிப்பிடும் 'அன்னை அரசு'..இவருக்கு போலித்தாயாகவே நடந்து கொண்டது. ஆயர் பாடி கண்ணனுக்கு பாலுட்டினாளாமே பூதகி..அவள் போல’

'நோ. நோ. டிரான்ஸ்பர் கேஸில் தலையிடுவதாய் இல்லை. இது அரசின் வழக்கமான செயல்பாடு."

'ஒரு ஐந்து நிமிடம் அவகாசம் கொடுங்கள் மை லார்ட்.. 5"