பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

சு.சமுத்திரம் 0



ஐந்தே ஐந்து நிமிடம். இந்த மாற்றல் உத்திரவு. ஒரு பழி வாங்கும் நடவடிக்கை என்பதை நிரூபித்துக்காட்டுகிறேன்."

'நத்திங்க டுயிங்.. நெக்ஸ்ட்..."

'மன்னிக்கனும் மை லார்ட்... ஒரு அரசு ஊழியர். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு நீதி மன்றத்திற்கு வருகிறார். அவர், வேவு பார்க்கப் படுகிறார். அவர் என்ன பரிகாரம் கேட்டாலும், அதை ஆட்சேபிப்பதற்கு என்றே.. அலுவலகத் தலைவரும், இரண்டாவது பிரதிவாதியுமான மிஸ்டர். சீனிவாசன், பரிவாரங்களோடு வந்திருக்கிறார்... இது, எந்த இலாகாவும் மேற்கொள்ளாத முயற்சி. நான் வேவு பார்க்கப் படுகிறேன் மை லார்ட். சிறுமைப் படுத்தப்படுகிறேன் மை லார்ட்.

நீதிபதிகள், புருவங்களை சுழித்தபோது, ஒரு இளம் வக்கீல் எழுந்தார். லேசாய் தலையைக் குனிந்துவிட்டு, பேசினார்.

'வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில் ஆட்சேபம் இல்லை.ஆனால் இடைக்காலத் தடை மட்டும் கொடுக்கலாகாது."

"நான் சமர்ப்பித்ததை .. இந்த வக்கீல் நிரூபிக்கிறார் மை லார்ட். அரசு தரப்பு வழக்கறிஞரின் மகனான இந்த இளம் வக்கீல், தனக்கு சம்பந்தப்படாத விவகாரத்தில் தலையிடுவதைக் கூட. நான் ஆட்சேபிக்கவில்லை மைலார்ட்.. காரணம் சினிமாவிலும், அரசியலிலும் ஊடுருவிய வாரிசு முறை நீதித்துறையிலும் நுழைவது தவிர்க்க முடியாதுதான். ஆனால், இந்த குறுக்கீடு அரசாங்கத்தின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் மை லார்ட்."