❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
67
'மீண்டும் சொல்கிறேன். நான், வழக்கை விசாரிப்பதை ஆட்சேபிக்கவில்லை மை லார்ட்.. மாற்றல் உத்திரவிற்கு... இடைக்காலத் தடை கொடுக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறேன்.
கடல்மணியின் வக்கீல், வாரிசு பற்றி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றிப் பேசியதால், இடது இருக்கை நீதிபதி இப்போது பலாப்பழமானார். அந்த இளம் வக்கீலை நோக்கி, சூடாகவே கேட்டார்.
'இது கொடுக்கக்கூடாது, அது கொடுக்கலாம் என்று சொல்ல நீங்கள் யார்..? எச்சரிக்கிறேன். வாதியின் வக்கில் தன் தரப்பை. ஐந்து நிமிடத்திற்குள் எடுத்துரைக்கலாம்.'
'நன்றி மை லார்ட்.. என் கட்சிக்காரரான கடல்மணி, முப்பதாண்டுகாலமாய் அரசுப் பணி புரிகிறவர். டில்லியில் இருந்து ஆறு மாதத்திற்கு முன்புதான். சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நிர்வாக உதவி இயக்குநராக வந்தார். அவருக்கு முன்பு இருந்தவர், வேலை வாய்ப்பு நிறுவனத்தை அணுகாமலே, ஒரு ஜாயிண்ட் செக்கரட்டரியின் வேலைக் காரியை, அலுவலகத்தை இரவில் காக்கும் செளக்கிதாராய் நியமித்திருப்பதைக் கண்டுபிடித்தார். இவ்வளவுக்கும் அந்தப் பெண்ணுக்கு கையெழுத்து போடக்கூடத் தெரியாது.. இதே போல், ஒரு லட்சம் ரூபாய் செலவுக்குக் கூட பெறாத ஒரு கட்டிடம் கட்ட, ஐந்து லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டது. பழைய நாற்காலி மேஜைகள் புதுப்பிக்கப் பட்டு, அவை புதிதாய் வாங்கப்பட்டதாய் சித்தரிக்கப் பட்டது. ஒரு பழைய பஞ்சிங் மெஷின் காயலான் விலையில் வாங்கப்பட்டு, அதுவே புது யந்திரமாக காட்டப்பட்டது. இப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் ஊழல்கள் பற்றி என் கட்சிக்காரர், இந்த அலுவலகத் தலைவரான சீனிவாசனுக்கு நோட்' போட்டார். அவர் கண்டுக்காத