ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்
69
லேசாய் ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அப்படிப் பார்ப்பது தவறு என்பதுபோல் அவசர அவசரமாய் முகங்களைத் திருப்பிக் கொண்டு, தங்களுக்குள் ஆலோசித்தார்கள். பிறகு வலது பக்கத்து நீதிபதி இப்படி ஆணையிட்டார். 'வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு. அடுத்த மாதம் பத்தாம்தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. அதுவரைக்கும் ஸ்டேட்டஸ் கோ. பராமரிக்கப்படவேண்டும்.' வழக்கறிஞர், கடல்மணியின் கரங்களை, நீதிபதிகளுக்குத் தெரியாமலே, பட்டும் படாமலும் குலுக்குகிறார். கடல்மணிக்கு, இத்தனை நாளும் பட்ட கஷ்டங்களும், நஷ்டங்களும், மகிழ்ச்சியின் விதைகளாகி, வேராகி, இப்போது சந்தோஷக் கனிகளானதுபோல் தோன்றுகிறது. நேராக, சீனிவாசனிடம் போகிறார். வெற்றிப் பெருமிதத்தை வெளிக்காட்டாமலே நெருங்குகிறார். 'பார்த்திங்களா.. பிரதர்! கடைசியில் தர்மம் ஜெயிச்சுட்டது. நான் பட்ட பாடெல்லாம் தீர்ந்திட்டது. உங்கமேல எனக்கு கோபம் இல்லை. ஆனாலும் நீங்க என்னை அப்படி அவசர அவசரமா ரீலீவ் செய்திருக்கக்கூடாது. சரி போகட்டும். இன்னைக்கே டூட்டிலே சேரப்போறேன். சீல் வைச்ச என் ரூமை இன்னிக்கே திறந்து விட்டுடுங்க. ஏகப்பட்ட வேலை இருக்கு..!" சீனிவாசனின் முகம் இருளானது, சிறிது நேரம் அப்படியே இருந்தவர் காதில், நிர்வாக அதிகாரி ஏதோ சொல்ல, அவர் மேகத்தில் ஏற்பட்ட மின்வெட்டுப் போல ஒரு கண்வெட்டுக் காட்டி, அவசர அவசரமாய் அரசு தரப்பின் வாரிசு வக்கீலின் பின்னால் போய், அவரது கழுத்துப் பக்கமாய் முன்னால் குனிகிறார். அவர்காதுகளில் கிசுகிசுக்கிறார். அந்த வாலிபம்" வாயெல்லாம் பல்லாக, சீனிவாசனின் கையை ஓசைப்