பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சு.சமுத்திரம்

படாமல் குலுக்குகிறது. பிறகு கிசு கிசுக்கிறது. சீனிவாசன் கடல்மணியை கம்பீரமாகப் பார்க்கிறார். மதயானையைப் போல நடந்து, கடல்மணியை நெருங்கி, நரிபோல் ஊளையிட்டுப் பேசுகிறார். 'நீங்க தான் தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க அண்ணாச்சி.. "ஸ்டேடஸ்கோ என்றால் நிலைமை இப்ப எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கணும் என்று அர்த்தம். இப்போதைய நிலைமை என்றால் .. இன்றைய நிலைமை. முந்தா நாள் நிலைமை இல்லை. அதாவது நீங்க அலுவலகத்தின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிகாரி.. உங்களுக்கும் எங்கள் அலுவலகத்திற்கும் சம்பந்தமில்லை. இதற்குப் பேர்தான் ஸ்டேடஸ்கோ...' கடல்மணி ஆடிப்போனார். கண்ணிழந்தவன் அதைப் பெற்று மீண்டும் இழந்ததுபோன்ற தசரத நிலை.. இன்ப மயமாய் துள்ளிய நாடி நரம்புகள் திடீரென்று துக்கித்தன. தலை லேசாய் கனத்தது. வக்கீலைப் பார்த்தால், அவரோ, வேறோரு வழக்கை விவரித்துக் கொண்டிருக்கிறார். கடல் மணி வேறு வழி இல்லாமல் சீனிவாசனிடமே பேசினார். " நீங்க சரியா புரிஞ்சிக்கல. பிரதர்.. என்னோட வழக்கே மாற்றல் உத்தரவு செல்லாது என்கிறது தானே.. எனது முறையீடே ஆர்டரை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது தானே. அதனாலே மாற்றல் உத்தரவு வருவதற்கு முன்பு நான் எந்தப் பதவியில் இருந்தேனோ, அந்தப் பதவியில் இருப்பதாய் அர்த்தம். நீங்க என்னை இருக்க விட்டே ஆகணும். இதுக்குப் பேர்தான் "ஸ்டேடஸ்கோ' 'நீங்க ஆயிரம் அர்த்தம் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. என் வக்கீலும் சொல்லிட்டார். ஸ்டேடஸ்கோ என்றால் இப்போது இருக்கிற நிலைமை. அதாவது நீங்க