ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
71
பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலைமை’. 'சரி..பிரதர்...எதுக்கும் நம்ம வக்கீல்கள் மூலம் இந்த மன்றத்திலேயே விளக்கம் கேட்கலாமா” 'எனக்கு தெளிவாவே தெரியும். தேவைப்பட்டால் நீங்க போய் விளக்கம் கேளுங்க". கடல்மணி, நொண்டி அடித்தப்படி, தன் வக்கீல் பக்கம் வந்தார். அவர் காதுகளில் கண்ணீர்த் துளிகள் பட, முணு முணுத்தார். வக்கீலும், சீனிவாசனைக் கோபமாக பார்த்து விட்டு எழுந்திருக்கப்போன நீதிபதிகளைப் பார்த்தார். அவர்களுக்கு எதிரில் நடுப்பக்கமாய் நின்றுகொண்டு, அவர்கள் கவனத்தைக் கவருவதற்காக உரத்த குரலிட்டு முறையிட்டார்.' 'மன்னிக்கணும் மை லார்ட்... இந்த மாமன்றம் எனது கட்சிக்காரரின் வேண்டுகோளை அனுதாபமாய் அணுகி, அவரது மாற்றல் உத்தரவை நிறுத்தி வைப்பதற்கு ஸ்டேடஸ்கோ கொடுத்திருக்கிறது. ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் அதை பூசாரி தடுப்பதுப்போல். அலுவலகத் தலைவர், என் கட்சிக்காரரை பணியில் சேர அனுமதிக்க மாட்டாராம். இதை மை. லார்ட்.. நீங்களே, இப்போதே கண்டித்து அருளவேண்டும். என் கட்சிக்காரர் பணியில் சேருவதைத் தடுக்கக் கூடாது என்று வாய் மொழி மூலமாவது ஆணையிடவேண்டும்.' மாண்புமிகு நீதிபதிகள் அரசுத் தரப்பு வாரிசு வக்கீலைப் பார்த்தப்போது..அவர் சர்வ சாதாரணமாய் பதில் அளித்தார். "மிஸ்டர் கடல்மணியைப் பணியில் சேர்த்தால், நீதிமன்ற அவமதிப்பாய் ஆகிவிடுமே மை.லார்ட். இவரது கட்சிக்காரர் முந்தா நாளே சென்னை அலுவலகத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். இதுதானே ஸ்டேடஸ்கோ. இந்த நிலைமை