உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சு.சமுத்திரம்

தானே நீடிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்குப் பேர்தானே ஸ்டேட்டஸ் கோ என்கிறது”

கடல்மணியின் வக்கீல் ஆவேசியானார். நீதிமன்றமே அவமதிப்பாய் கருதும் வகையில் வாதிட்டார்...

'இல்லவே இல்லை... மாண்புமிகு நீதிமன்றத்தின் ஆணையின் வார்த்தைகளைப் பார்க்காமல்..அதன் ஆதார சுருதியைப் பார்த்தால், ஸ்டேடஸ்கோ என்பது, என் கட்சிக் காரர் மாற்றல் உத்தரவிற்கு முன்பு எந்த நிலையில் இருந்தாரோ.அந்த நிலை நீடிக்கவேண்டும் என்றே அர்த்தம்....'

மாண்புமிகு நீதிபதிகள், வழக்கறிஞர்களை கையமர்த்தி விட்டு, தங்களுக்குள்ளேயே, நின்ற கோலத்தில் ஆலோசித்தார்கள். பிறகு இடதுபக்க நீதிபதி, பாரா முகமாய் கருத்துரைத்தார்.

"ஸ்டேடஸ்கோ. நீடிக்க வேண்டும் என்று தெளிவாகவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது...எது ஸ்டேடஸ்கோ என்பதை இரு தரப்பும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்".

வணக்கத்திற்குரிய நடுவர் மன்றத்தின் அன்றைய நீதி பரிபாலனம் முடிந்துவிட்டது. மாண்புமிகு நீதிபதிகளும் போய் விட்டார்கள். அரசு வக்கீல். கடல் மணியின் வக்கீல் உள்ளிட்ட அனைத்து வக்கீல்களும் இன்னொரு கோர்ட்டுக்கு போய் விட்டார்கள்... கட்சிக்காரர்களும் காணாமல் போனார்கள். ஆனாலும்..?

சீனிவாசனும், கடல் மணியும் அங்கேயே நின்று கோழியா முட்டையா என்பது மாதிரி இன்னமும் விவாதிக்கிறார்கள்.

அது சரி.. எதுங்க ஸ்டேடஸ்கோ?

—இதயம் பேசுகிறது—பொங்கல் மலர்-1996