94
சு.சமுத்திரம் ❍
சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தபடி, ஊதிப்பிடுவேனாக்கும் என்பது மாதிரி ஊதித் தள்ளினான். ஏற்கனவே போலீஸ் என்றதும் பயந்து போன ராக்கம்மாவுக்கும், சோதிக்கும் அந்த புகைந்த சிகரெட் காவல் துறையின் கண்ணீர்ப் புகை போல் தோன்றியது. இருவரும் வெளியேறினார்கள்.
சோதி, கையிலிருந்த காசில் ஒரு மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டமண்ணெண்ணெயை ஒட்டிக்கி இரட்டியாய் வாங்கப் போய்விட்டாள். ஆனால் ராக்கம் மாவால் அப்படி முடியாது. காரணம், இவளுக்கும் இவள் பங்களா அம்மாவிற்கும் ஒரு ஒப்பந்தம். கேஸ் சிலிண்டர் காரியான பங்களாக்காரியின் கார்டில், மண்ணெண்ணெய்க்கு ஒதுக்கீடு இல்லை.ராக்கம்மாவின் கார்டில் மண்ணெண்ணெய்யே பிரதானம். இந்தப் பின்னணியில் பங்களா அம்மா மண்ணெண்ணெய் கிடைக்கும் சமயத்தில் ராக்கம்மாவிடம் லிட்டருக்கு இரண்டு ரூபாய் இருபது பைசா வீதம் பத்து லிட்டர் வாங்க இருபத்திரெண்டு ரூபாய் கொடுத்து விடுவாள். முதல் தேதி சம்பளத்திலும் பிடித்துவிடுவாள். இந்தக் கடனுக்கு வட்டியா அந்தம்மாவுக்கு ரெண்டு லிட்டர் கொடுக்க வேண்டும்.ஆனானப்பட்ட இந்த நியாய விலைக் கடையில் மண்ணெண்ணெய் இல்லை என்றால், வாங்கிய பணத்தை இந்த ராக்கம்மா பங்களா அம்மாவிடம் உடனடியாக கொடுத்து விட்டு, எண்ணெய் எப்போது கடைக்கு வருகிறதோ அப்போதுதான் வாங்க வேண்டும்.
ராக்கம்மா யோசித்தாள். மளிகைக் கடையில், கையிலிருக்கிற பணத்துக்கு, ஐந்து லிட்டர்தான் வாங்க முடியும். இதில் இரண்டு வீட்டுக்காரிக்கு அதுவும் இவள் கணக்கில். அப்போ மூன்று லிட்டர் இருபத்திரெண்டு ரூபாய்.. எப்பாடி...கட்டுபடியாகாது...