பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

0 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 93

"நாளக்கியாவது..."

“எனக்கென்ன ஜோசியமா தெரியும்"

ராக்கம்மா, பதில் பேசுவதற்கு முன்பு சோதி மோதினாள்.

"நீங்க செய்யற அக்கரமத்துக்கு கட்சில மரத்தடில கிளி ஜோசியத்துக்குத்தான் வரப்போறீங்க... இன்னாய்யா பேச்சு பேசறே கொயுப்பு பேச்சு..."

கிடா மீசை, இரங்குவதுபோல், இறங்கிப் பேசியது.

"இந்தா பாரும்மா...உன்கிட்ட வாயாட எனக்கு நேரமில்ல..நான் வேணுமின்னா..எங்க பெரிய ஆபீசரோட அட்ரஸ் குடுக்கறேன். டெலிபோன் நம்பர தாரேன். நானே உன் பேர்ல கம்பளைண்ட் எழுதி கொடுக்கறேன். நீ கையெழுத்துப் போட்டு அனுப்பினாபோதும். சரிதானா..?"

"பெரிய ஆபீசர்களுக்கும் இங்க இருந்து கமிஷன் போற தைரியத்திலயா பேசற? அந்த பசங்க ஒய்ங்கா இருந்தா நீ ஏன் இப்படி பேசற. இன்னாய்யா நாடு இது. ஒட்டுப் பொறிக்கி பசங்க ஒர்த்தன் கூட இத கேக்கறதில்ல..சீ... பேஜாறான பொழப்பு. ஏழைங்க வயித்து நெருப்பு உங்கள சும்மா விடாது. வேணுமின்னா பாரு..."

எடுபிடியாள் எகிறினாள்

"இதுக்கு மேல பேசினே. அப்புறம் உங்கள போலீசுல ஒப்படைக்க வேண்டியதிருக்கும் ஜாக்கிரத... யாருகிட்ட பேசறோம்கறது ஞாபகம் இருக்கட்டும்."

ஏணிப்படி மாதிரி சிறிது சாய்ந்து தட்டையாக இருந்த அந்த எடுபிடியாள் பேசப்பேச 'கிடா மீசைக்காரன்,' ஒரு