பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 சு.சமுத்திரம் 0 ராக்கம்மா.... அவன் முதுகில் குத்துவது மாதிரியான குரலோடு கேட்டாள்.

ஜல்தியா தா சாரே...

கிடா மீசை அலட்சியமாக திரும்பியது. அவளை நேருக்கு நேராக பார்த்துப் பேசுவது, தமது அந்தஸ்துக்கு கீழாவது என்று அனுமானித்தபடியே ஜன்னல் கம்பிகளைப் பார்த்தபடி பதிலளித்தது.

"ஸ்டாக்... தீர்ந்து போச்சு..."

"இன்னா சாரே இப்படி பன்னுறே. மூணு நாளா நாயா அலயறேன் சாரே"

‘'நீ எப்படி அலஞ்சா எனக்கென்ன... ஸ்டாக் இல்லன்னா இல்ல...

"எப்படியாவது பாரு சாரே..."

'உன்னப் பார்க்க எனக்கு நேரமில்ல...'

"யோவ் செருப்பு பிஞ்சிடும்..."

கிடா மீசை ராக்கம்மாவையே முறைத்தபடி நின்றான். உடனே ஒரு எடுபிடியாள் அவனுக்கு பதிலாக அவளிடம் பேசினான்.

"இந்தா பாரும்மா... உனக்குத்தான் பேசத் தெரியும்னு பேசாதே... ஸ்டாக் இல்லன்னா இல்ல... 1200 கார்டுல 500 கிருஷ்ணாயில் கார்டு. 300 கார்டுக்குத்தான் கிருஷ்ணாயில் அனுப்பினான். 200 கார்டுக்கு வந்த பிறகுதான் உனக்கு தரமுடியும். சும்மா பினாத்திகிட்டு நிக்காத.... இடத்த காலிபண்ணு."