பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் போக்கை அனுசரித்து ஜாதிப் பெயர்களை விட்டு விட்டார்கள். அவர்களில் சிவகுருநாதனும் ஒருவன். மாணிக்கம் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை பெற்று டெல்லாரி ஜெயிலுக்குக் கொண்டு போகப்பட்டார் என்று தெரிந்ததும், சிவகுருநாதன் ஆத்திரம் அடைந்தார். "இந்தக் காலத்திலே யாரையும் நம்ப முடியறதில்லே. யாரு எந்தக் சமயத்திலே எப்படி இருப்பான், அல்லது எப்படி மாறுவான் என்றே ஊகிக்க முடிவதில்லை. மாணிக்கம் நல்லவனாக இருப்பான்னு நினைச்சுத்தான் அவன்கிட்டே வீட்டை ஒப்படைத்தேன். அவன் என்னமா மாறிட்டான் பார்த்தியா!" என்று நெஞ்சோடு கிளத்தி அலுத்துக் கொண்டார் அவர் அப்புறம் வீட்டை வந்து பார்த்ததும், அது இருந்த இருப்பைக் கண்டதும், "இதுக்குத்தான் வீட்டை வாடகைக்கே விடப்படாது என்கிறது. என்னதான் இருந்தாலும், வீட்டுக்காரன் மாதிரி, வாடகைக்கு இருக்கிறவங்க வீட்டைப் பேனவா செய்வாங்க?" என்றும் அவர் கூறிக் கொண்டார். ஆனால் வீட்டை வாடகைக்கு விடாமல் கம்மா பூட்டிப் போட்டு வைப்பதிலும் பிரயோசனமில்லை; அப்பவும் வீடு வம்பாத்தான் பாகும் என்று அவர் மனம் பேசியது. அவ்வளவு பெரிய வீட்டுக்கு அந்த ஊரில் வாடகை மாதம் பத்து ரூபாய்தான் கிடைத்தது. அதற்கு மேலே கொடுக்க எவரும் முன்வரவில்லை. வேறு வழி இல்லை என்று அந்தப் பணத்துக்கே வீட்டை வாடகைக்கு விட்டார் அவர் பாண்டியன் பிள்ளை குடும்பம் ஒத்தை வீட்டில் குடி புகுந்தது. குடும்பத் தலைவர் பாண்டியன் பிள்ளை ஒரு அப்பாவி ஆனால் அயராது உழைப்பார் எந்த வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். எவ்வளவு துரமானாலும் நடந்தே போய்விடுவார். அவர் மனைவி பர்வதம் சரியான தாடகை பிராண்டு. பெரிய வாயாடி, அவள் ஏச்சுக்கு எவரும் பயப்படத்தான் வேண்டும். தெருச்சண்டை, ஊர்ச்சண்டை என்று நாள்தோறும் ஏதாவது சண்டையில் புகுந்து வெற்றி வீராங்கனையாக வீடு திரும்புவாள். வெளிச்சண்டை கிடைக்காவிட்டால், வீட்டில் புருஷனோடு சபருக்கு நிற்பாள். அவர்களுக்கு நான்கு பெண்கள், ஒரு பையன். பையன் பலசரக்குக் கடையில் வேலைபார்த்தான். பெரியமகள்