பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் “ஏ தேவடியா மகனே!" என்று தொடங்கி, வாய்கூசாது கண்டபடி ஏசத் தொடங்கினாள் பர்வதம் "கரிக்கொல்லன் மேலே விட்டெறியறதுக்கு கல்லுகட்டி எதையும் காணோமே" என்று முனங்கினாள். அவள் கூப்பாடு போடுவதைக் கேட்டு மகள்கள் ஓடி வந்தார்கள். உள்ளே எட்டிப் பார்த்தார்கள். "சும்மா இரம்மா-கத்தாதே. ராச்சத்தம், என்னவோ ஏதோன்னு அக்கம் பக்கத்திலே நினைக்கப் போறாங்க" என்று இரண்டாவது மகள் இசக்கியம்மை அம்மா அருகில் நின்று சொன்னாள். "என்னட்டி நீ பேசுறது: திருட்டுக் கரிமுடிவான் எவனோ. அவள் கவனத்தைத் தன்பக்கம் இழுத்தான் அந்தத் திருடன், அவன் விறுவிறு என்று மேலே ஏறி, சுவர்மீது தாவிவிட முயன்றான். அங்கிருந்து தப்பி ஓடும் முயற்சியில் அவன் கருத்தாக இருந்தான். அவனை யார் என்று பர்வதம் கண்டு கொண்டாள். வடக்குத் தெருவில் உள்ள பலகாரக் கடையில் சமையல்காரனாகப் பணிபுரிகிறவன். உடனே அவளுக்கு உண்மை பளிரென்று புலனாயிற்று. இந்தத் தடியன் திருட வரவில்லை; கள்ளத்தனமாக இன்பம் அனுபவிக்க வந்திருக்கிறான் என்று புரிந்தது. மின்னல் வேகத்தில் அவள் மூளை இப்படி உணர்த்தியது. விதவை காமாட்சி மீது அவளுக்கு சந்தேகம் உதித்தது. "ஓகோ, இது வேறே நடக்குதா?" என்று கத்தியவாறே மடை குத்திவிடுவதற்கென்று மூலையில் சாத்தி வைத்திருந்த மூங்கில் கம்பை எடுத்து அவன் முதுகில் பளாரென்று அறைந்தாள் t ifra)jg51D. அடி பலமானதுதான். ஆனாலும் அவன் வாய் திறக்காமலே, சுவர் மீது ஏறும் முயற்சியில் வேகம் காட்டினான். பர்வதம் துணிச்சலாக ஒரு காரியம் செய்தாள். எட்டி, துவளத்தின் மேலே சாய்ந்து முன் குனிந்து, கை நீட்டி அந்தத் தடியனுடைய இடுப்பு வேட்டியைப் பிடித்து இழுத்தாள். அது அவிழ்ந்து அவள் கையோடு வந்துவிட்டது. வெறும் உடலனாய் அவன் சுவர் மீது தொத்தி ஏறியிருந்தான். அவள்