பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்



கையிலிருந்த ஐஸ் க்ரீம் காலியானதும் 'ஸார் ஸார் உங்க சட்டையிலே இஹிஹி!' என்று கனைத்தாள் அவள்.

தன் சட்டை மீது சிவப்புக் கறை படிந்திருப்பதை அப்பொழுது தான் கவனித்த ஆசிரியர் ஒரு நிமிஷத்திற்குள் அவள் ஒரு க்ரீமைத் தீர்த்து விட்டதையும் உணர்ந்தார். அவர் கை கன்னத்தில் சில்லிட்ட இடத்தைத் தடவியது.

'முகத்திலே கூடப் பட்டுவிட்டதா ஸார்! வருத்தம்' என்றாள் அவள்.

'எருமைக் கடாவே கழுதைக் குட்டியே!' என்று சிற எண்ணிய பரமசிவம் ‘எருமைக் கழுதை மோறையைப் பாரு!' என்று கத்தினார்.

சிரித்தவளின் முகம் சிவந்தது.

'வருத்தம்! என்றார் ஆசிரியர் நையாண்டிக் குரலில்.

'மன்னிக்கனும் ஸார் என்றாள் அவள்.

'அதுதான் நான் சொல்றேன். செய்றதைச் செய்து போட்டு வருத்தம்னு அப்புறம் சொல்வதனாலே, செய்தது செய்யாததாகி விடுமா? மடக் கழுதை என்று ஏசுகிறேன், உடனேயே மன்னிக்கணும் என்றும் சேர்த்துக் சொல்லிவிட்டால் சரியாகப் போச்சா? இதிலேயெல்லாம் அர்த்தமே கிடையாது தெரியுதா? கூடிய வரையில் மனுஷத்தனம் குன்றாமல் வாழனும். தவறு நேராமல் நடந்து கொள்ளணும். சூழ்நிலை மறக்கும் படியாக என்ன குதிப்பு வாழுது? தெருவிலே போறவன் மேலே மோதி எச்சிக் கறை படியும்படி விழுந்துவிட்டு, பிறகு மன்னிக்கனும்கிறதுலே என்ன அர்த்தமிருக்கு? - ஆசிரியர் அதிகப் பிரசங்கம் பண்னத் தொடங்கிவிட்டார்.

குமாரி அழாத குறையாக மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றாள். 'தெரியாமல் செய்து விட்டேன்!' என்று முனங்க எண்ணினாள். ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

'இப்ப என்னைத் தெரிந்தவங்க எவனாவது வந்திருந்தால் என் மதிப்பு நாளைக்கு கப்பலேறி விடுமா சும்மாவா வால் நட்சத்திரம் பத்திரிகாசிரியர் பரமசிவம் மூஞ்சியில் ஐஸ்க்ரீம் வீச்சு! வீரப் பெண்ணின் சூரச் செயல் என்று எழுதி அச்சிட்டு சுவரொட்டி ஒரு 3