பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்



2

ஆசிரியர் பரமசிவம் குமாரி செல்வாவைப்பற்றி எண்ணிய அபிப்பிராயங்களில் தவறே கிடையாது. அவள் போக்கு அப்படித்தானிருந்தது.

கொஞ்சம் படிப்பு வாசனை பெற்றுவிட்டதுமே இந்தக் காலத்துப் பெண்கள் சினிமா ஸ்டார்கள் போல் திகழவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொள்கிறார்கள். அதனால் வாத்தியாரம்மாக்கள் கூட எக்ஸ்ட்ரா நடிகைகள் மாதிரிக் காட்சியளிப்பதையே நாம் காண முடிகிறது. வீட்டரசிகளுக்குக் கூட எக்ஸ்ட்ரா நடிகையரே லட்சியமாகி வழிகாட்டுகிற இந்த யுகத்தில் நர்ஸம்மா சங்கரபுஷ்பத்தின் மகள் செல்வா சினிமாக்காரி மாதிரி வாழ்க்கை நடத்துவதில் வியப்பில்லை.

பள்ளிப் படிப்பும், சினிமாப் படங்களும் தமிழ் நாட்டு சமுதாயத்திலே-முக்கியமாகப் பெண் குலத்திலே-அபத்தமாகச் சுவடுகள் பதிப்பதற்கு முன்பு, மேற்கும் கிழக்கும் சந்திக்க முயலும் அவியல் கலாசாரத்தை அதிகம் கையாண்டவர்கள் 'சட்டைக்காரர்கள்' என்று புகழ்பெற்ற ஆங்கிலோ இந்தியர்களும் ‘வேதக்காரர்கள்' என்று சிறப்புப்பெற்ற கிறிஸ்துவர்களுமாவர். இவர்களது நாகரிகம் பெண்களிடையே 'மிஸ்ஸியம்மா' க்களாலும் நர்ஸம்மாக்களினாலும் வளர்க்கப்பட்டு சுதந்திர ஆர்வமுள்ள வேறு பலருக்கு லட்சியமாகி விட்டது.

இப்படி வளர்ந்து வந்த பெருங்கிளையிலே பூத்த தனிமலர் சங்கர புஷ்பம். அவள் வேதக்காரியாகிவிட்டாள்; விபூதி அணிவதில்லை; குத்துவிளக்கிற்கு பூஜை செய்வதில்லை; புனிதத் திருநாட்கள், விரதங்களைக் கொண்டாடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பெருகி வந்தன. பட்டியலில் அடங்காத அளவுக்கு இவை வளர்ந்திருக்கும். ஆனால் 'அவள் ஓடிப்போய்விட்டாள்' என்ற விஷயம் ஊரார் பேச்சுக்குப் பெருங் கோடு கிழித்து விட்டது.

ஊரை விட்டு ஓடி வந்தது, அவள் நர்ஸம்மாளாக மாறியது, ஒரு செல்வரின் துணைவியாகிக் குமாரி செல்வாவின் தாயானது எல்லாம் நமக்கு வேண்டாத கதை. செல்வாவைச் செல்லமாக வளர்த்து நவயுக நாகரிகச் சுடர்க்கொடியாக மாற்றிவிட அவளது-