பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 . ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் அதேபோல, ஒவ்வொரு விடும் தனக்கெனத் தனிக் கதை கொண்டிருக்கிறது. இரண்டு ஆற்றில் குளிக்காத நாள் எல்லாம் 'பிறவா நாளே' என்ற எண்ணம் கொண்டிருந்த பிறவிப் பெருமாள் பிள்ளைக்கு, ஆற்றுக்குப்போன ஒரு நாள் அதிவிசேஷ அற்புத நாளாக அமைந்தது. அவரைப் பொறுத்த வரையில், ஆற்றில் நீராடுவது வெறும் நித்திய கர்மம் அல்ல; மனோகரமான இனிய சுகானுபவம் ஆகும். பலரைப் போல, போனோம்.தண்ணிரிலே முங்கினோம்-தலையைத் துவட்டினோம்-திரும்பினோம் என்று அவர் செயல்படுவதில்லை. பல் துலக்குவது, வேட்டி துவைப்பது முதல், குளித்து முடித்துக் கரை ஏறுவதுவரை ஒவ்வொரு காரியத்தையும் வெகு சாவதானமாய் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வது அவர் வழக்கம். அந்த இடத்தில் ஆறு அழகாக நெளிந்து வளைந்து, ஒரு பருவ மகள் போல், அசைந்து நகர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. கரைகளில் எழில் கொலுவிருந்தது; அமைதி குடியிருந்தது. தூரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் நெடிய, உயரிய தோற்றம், வேளைக்கு ஒரு வனப்பு காட்டி மகிழ்வளித்தது. அச் சூழ்நிலையின் அழகிலும் அமைதியிலும் லயித்தவாறே பிறவிப்பெருமாள் பிள்ளை ஆற்றில் சுகமாகக் குளிப்பார். எவ்வளவு நேரம் என்று ஒரு கணக்குக் கிடையாது. உள்ளமும் உடலும் திருப்தி அடைந்ததும் கரையேறுவார். அப்போது சூரியன் கீழ்திசையில் செவ்வட்டமாய் தோன்றி, ஒளித்தகடாய் மாறி, இதமான வெயிலைக் கொட்டத் தொடங்கியிருக்கும். அந்த ஒளியில் எல்லாம் புதுவனப்புடன், புத்துயிர்ப்புடன் பிரகாசிக்கும். அன்றும் அப்படித்தான். ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஒன்று பிறவிப்பெருமாள் பிள்ளையின் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு மாமரத்தின் கிளையில் பளிச் பளிச்சென்று ஒளி வெட்டித் தெறித்துக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார். கூர்ந்து நோக்கினார். ஒரு குரங்கு. அதன் கையில் ஒரு 'செம்பு'. அந்தப்