பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 ஒரு விட்டின் கதை வல்லிக்கண்ணன் நியாயத்தைக் கண்டுபிடிப்பதற்காக பிறவிப்பெருமாள் பிள்ளை எந்த வழியையும் தயங்காது மேற்கொள்வார். ஒரு சமயம் கீழத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு குழந்தையின் கழுத்தில் கிடந்த சங்கிலி திருடு போய்விட்டது. திருடியது யார் என்று தெரியாதுதான். இருந்த போதிலும். அந்தத் தெருவில் ஒரு வண்டிக்காரனாகப் பணியாற்றிய ஒருவன்மீது சந்தேகம் ஏற்பட்டது. விஷயம் பிறவிப்பெருமாள் பிள்ளையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவர் வண்டிக்காரன் மாணிக்கத்தை வரவழைத்தார். நயமாகவும் பயமாகவும் கேட்டார். அவன் தனக்கு எதுவும் தெரியாது என்று சாதித்தான். திடீரென்று சீறி வெடித்தார் பிள்ளை. "சவத்துப் பயலை வேப்ப மரத்தோடு கட்டி வை" என்று உறுமினார். அவன் கட்டி நிறுத்தப்பட்டதும், 'கொண்டா ரெண்டு புளிய மிளாறு'!" என்று கர்ஜித்தார். பொடிசாய், மெலிந்து நீண்ட, புளிய மிளாறுகள் வந்து சேர்ந்தன. அவற்றில் ஒன்றை இடது கையில் வைத்துக் கொண்டு, ஒரு மிளாறை வலது கையில் பற்றி மாணிக்கத்தை விளாக விளாசென்று விளாசித் தள்ளினார். நாலைந்து அறைகள் வரை கல்லுளி மங்கன் மாதிரி நின்ற மாணிக்கம், மேலும் தாக்குப் பிடிக்க முடியாமல், "ஐயோ, சாமி, என்னை கொல்லாதிங்க... விட்டிடுங்க... உள்ளதை சொல்லிப் போடுதேன்" என்று அலறினான். பிள்ளை, ஆவேசம் வந்தவர் போல், மிளாறை சுழற்றி அடித்துக் கொண்டேயிருந்தார். சுற்றி நின்றவர்களுக்கு 'ஐயோ பாவம்' என்றிருந்தது, ஈவு இரக்கமில்லாமல் இப்படிப் போட்டுக் கொல்கிறாரே என்று தோன்றியது. "மாட்டுத் தொழுவிலே கூரையிலே தெற்கு ஓரத்திலே இருக்கு சங்கிலி" என்று மாணிக்கம் தெரிவித்தான். - "ஜாக்கிரதை, சங்கிலி அங்கே இல்லையோ, உன் தோல்ை உரிச்சுப் போடுவேன் உரிச்சு!" என்று எச்சரித்தபடி, பிள்ளை மிளாறு களைக் கீழே போட்டார். சங்கிலியைத் தேட ஆட்கள் ஓடினார்கள். ரொம்பச்