பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்னன் பகிலுக்கு தகடு மந்திரிச்சு வைக்கணும். புள்ளைக்கு தாயத்து கட்டணும். நீங்க சொல்லுங்க, அந்த வீட்டு ஆளுக்கும் கைகால் விளங்காமல் பண்ணிப் போடுதேன்" என்றார். - தையல்நாயகி யோசித்தாள். மகளைப் பார்த்தாள். சூடி சிரித்தாள். பிறகு அழுதாள். அம்மாவுக்கு வேதனையோடு, பழிவாங்க வேண்டும் என்ற வெறியும் ஏற்பட்டது. "சரி அப்படியே செய்யும்" என்று சொன்னாள். பண்டிதர் கேட்ட பணத்தையும் கொடுத்தாள். . 'கடைசிச் செவ்வாய் இரவு அந்த வீட்டில் சாம்பிராணி வாசனை கவிந்து நின்றது. மர்மமானதிகில் கலந்த-ஒரு சூழ்நிலை நிலவியது. செல்லம் பண்டிதர் உரிய முறையில் பூசையில் ஈடுபட்டார். குத்து விளக்கின் முன்னே, பூக்களின் குவியலுக்கிடையே இரண்டு செப்புத் தகடுகள் மினுமினுத்தன. அற்றில் சக்கரமும் சதுரங்களும் சில கிறுக்கல்களும் காணப்பட்டன. "செய்வினை எடுக்கறதுக்கு முந்தி நம்மை பாதுகாப்பா மந்திரத்தினாலே கட்டிக்கிடணும். பேய்கள் வீட்டுக்கிட்டே நெருங்க விடாதபடி, வீட்டைச் சுற்றி காஞ்சீரான் முளைகளை அறையனும், இது ஒரு மரத்திலேயிருந்து எடுத்து வாறது. காஞ்சீரான் முளைக்கு அருகிலே பேய்கள் அண்டாது" என்று பெருமையாகச் சொன்னார். சில குச்சிகளை அந்த வீட்டைச் சுற்றிலும் தரையில் பதித்து வைத்தார். - வெளியே ஒருவனை காவல் நிற்க வைத்தார். ‘இதெல்லாம் மத்தவங்களுக்குத் தெரியப்படாது. ரொம்பவும் ரகசியமாச் செய்ய வேண்டிய காரியம். சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரிஞ்சா வீண் வம்புதான் வளரும்" என்று பண்டிதர் எச்சரித்தார். இந்த முன்னேற்பாடுகளை செய்துவிட்டு அவர் மந்திரிப்பில் ஈடுபட்டார். நேரம் ஊர்ந்தது. காவல் காத்து நின்றவன் பரபரப்பு அடைந்தான். விளக்கு வெளிச்சம் வீட்டை நோக்கி வருவதைக் கண்டான். இரண்டு மூன்று விளக்குகள் அசைவதை உணர்ந்தான். வண்டி மாடுகளின் மணியோசையும், சக்கரங்கள் வேகமாக உருண்டு வருகிற சத்தமும் கேட்டது. இந்தப் பக்கம்தான் வருகிறது என்று புரிந்து