உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ITLE! என்னை மறந்துடுங்க! இவ்வளவு படிச்ச நீங்க இந்தக் காரியம் செய்யலாமா? நான்தான் படிக்காத பட்டிக் காடு! எனக்குப் புத்தி சொல்லித் திருத்த வேண்டிய நீங்க, என்னைக் கெடுக்க நினைக்கலாமா? நல்லவேளை; எங்க அப்பா அம்மா செஞ்ச புண்யம் ஆண்டவனாப் பாத்து என் கண்ணைத் திறந்தாரு! - அதற்கு மேல் செங்கமலத்தைப் பேசவிடாமல் மகேஸ் வரன் அவளைத் தழுவிக்கொண்டான். அவள் திமிரினாள். தன செங்கமலம்! ஏதோ என் பசியை அடக்கிக்கொள்ள இப்படியொரு முயற்சியிலே ஈடுபட்டேன் என்று நினைக்காதே! நீ நம்பமாட்டாய்! உன்னால் நம்பவும் முடியாது! லட்சுமி விளையாடுகிற பண்ணையார் அந்தஸ்து என்ன; ஜாதி கௌரவம் என்ன; கேவலம் தரித்திர லட்சுமி குடியிருக்கிற தாழ்த்தப்பட்ட ஜாதியிலே பிறந்த செங்கமலத்தோட மதிப்பு மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமில்லையா? இப்படி யொரு போராட்டம் உன் மனத்திலே நடைபெறும், எனக்குத் தெரியும்! ஆனால் ஒன்று! உறுதியாகச் சொல்கிறேன். என்ன - நான் நான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால் - அந்த மணப் பெண் செங்கமலமாகத்தான் இருக்க முடியுமே தவிர- நிச்சயம் மற்றொருத்திக்கு இந்த இதயத்திலே இடமில்லை! செங்கமலம் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் மல்கிடக் கேட்டாள். முடியுமா? நடக்கிற காரியமா? உங்கப்பா எவ்வளவு பெரியவரு! ஊர் உலகந்தான் ஒத்துக்குமா? வேண்டாங்க! விபரீதமா ஏதாச்சும் ஆயிடும்! அப்பறம் எங்க அப்பாவும் அம்மாவும் தூக்கு மாட்டிக்கிட்டு தொங்கிடுவாங்க! எங்க குடும் பத்துக்கு காலாகாலத்துக்கும் என்னால ஒரு அவமானம் வர வேண்டாங்க! என்னை மன்னிச்சிடுங்க! தயவுபண்E மறந் துடுங்க! செங்கமலம் விம்மி விம்மி அழுதுகொண்டே அவன் காலடியில் விழுந்தாள். மேல் “செங்கமலம்! உண்மையைச் சொல்லு! உனக்கு என் ஆசை ஏற்பட்டது உண்டா இல்லையா? அந்த ஆசையை நீ உன் கண்கள் மூலம் காட்டியது உண்டா இல்லையா? உன் வீட்டு வாயிற்படியில் டித்துக்கொண்டபோது என் நெற்றி யில் மஞ்சள் பத்து போட்டாயே; அப்போது உன் கைவிரல் கள் என் முகத்தில் காதல் நடனம் ஆடியதே; அது என் குற்றமா? அல்லது உன் குற்றமா? “எல்லாம் என் குற்றமாகவே இருக்கட்டுங்க! ஏதோ ஒரு கெட்ட சொப்பனம் கண்ட மாதிரி நம்ப ரெண்டு பேரும் மறந் துடுவோங்க!" 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/56&oldid=1702445" இலிருந்து மீள்விக்கப்பட்டது