உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“முடியாது செங்கமலம்; கண்டிப்பாக முடியாது! நீ என் மீது காதல் கொண்டாய்! ஆனால் எனக்கு உன் மீது ஏற்பட்ட காதல்; வெறும் உணர்ச்சியால் உருவானது அல்ல! நான் என் உள்ளத்தில் பதித்துக்கொண்டிருக்கும் கொள்கையின் அடிப் படையிலும் மலர்ந்ததாகும்! கொள்கைக்காகக் காதலைத் தியா கம் செய்துவிடுகிற வீரர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் உன்னிடம் கொண்டுள்ள காதலே என் கொள் கையை நிறைவேற்றுவதற்காகத்தான்! சாதி சமய உயர்வு தாழ்வு என்னும் சாத்திரச் சனியனை இந்தச் சமுதாயத்தி லிருந்தே விரட்டித் தொலைப்பதற்கு என்னைப்போல பல மகேஸ் வரன்கள் கிளம்ப வேண்டும்! அவர்களுக்கு வழிகாட்டியாக நான் இருக்க வேண்டுமென்பதே என் ஆவல்! அதைத் தடுக் காதே! இதெல்லாம் நடக்குமா? நடக்க முடியுமா? என்றெல் லாம் நம்பிக்கையிழப்பது அழகல்ல! நமது திருமணத்தை நான் நடத்திக் காட்டுகிறேன் பார்!” சில விநாடிகள் அந்த மண்டபத்தில் பேச்சில்லை. செங் கமலம் அழுகிற ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அவள் இமையணையை உடைத்துக்கொண்டு புறப்பட்ட நீர்த்துளிகள், கன்னத்தில் உருண்டு, அவள் மடி மீது தலை வைத்துப் படுத் திருந்த மகேஸ்வரனின் உதடுகளில் விழுந்தன. அந்த உப்பு நீர் அவனுக்கு உவட்டாத செங்கரும்புச் சாறாக இனித்தது. அவளது தலையை அழுத்திப் பிடித்துத் தன் இதழ்களோடு அவள் இதழ்களைப் பொருத்தினான். சூடான இதழ்கள் சுவையான முத்தங்களைப் படைத்தன. மேலும் அவள் உடலை வளைத்துத் தன்னருகே கொண்டு வர மகேஸ்வரன் செய்த முயற்சி பலிக்கவில்லை. முழுவதும் நனைந்துவிடச் செங்கமலம் தயாராக இல்லை. எழுந்தாள். நடந்தாள். மகேஸ்வரன் தொடர்ந்தான். மீண்டும் இதழ்கள் சங்கமமாயின. சிவசக்தி சிலையை இருவரும் பார்த் தனர். அவன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிலையையும் அவ ளையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்தான் லேசாக! நாணம், அவளை ஆட்கொண்டது! அவனைப் பார்த்துக் கொண்டே மண்டபத்திலிருந்து ஒரு சிறிய வாசல் வழியாக வெளியேறினாள். அவனும் மண்டபத்தின் மற்றொரு வாசல் வழியாகப் பதுங்கிப் பதுங்கி வெளியே சென்றான். ‘‘பலே! பலே! ரொம்ப அழகா இருக்கு! படிச்ச லட்ச ணமா? பட்டணத்து அனுபவத்தை இந்தப் பட்டிக்காட்டிலே கொட்டுராப்ல இருக்கு! மகேஸ்வரனைப் பார்த்து திருக்கைவால் முனியாண்டி கேலி யாகச் சொல்லி உறுமிக்கொண்டே தரையில் காரித் காரித் துப்பி னான். மகேஸ்வரன் பதில் எதுவும் சொல்லாமல் நடையில் வேகம் கலந்து விரைவாக அந்த இடத்தைக் கடந்து சென் றான். 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/57&oldid=1702446" இலிருந்து மீள்விக்கப்பட்டது